“நிறவாதம் பாதிக்கும். நிழலியம் நிலைபேறுடையதாக்கும்”
Shadeism: By Nayani Thiyagarajah
Canada – Calgary ன் மாநகர முதல்வராக Naheed Neshi என்ற முஸ்லீம் ஒருவர் தேர்வாகியுள்ளார். இவரிடம் நீங்கள் முதலில் கனடியரா அல்லது முஸ்லீமா என 1010 வானொலி பேட்டி ஒன்றின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு “நான் நானாக இருப்பதில் பெருமடையகின்றேன்” எனக் கூறினார். இதில் இவரது நிறம், மதம் உட்பட்ட சகலதும் அடங்கும். காலனித்துவ ஆட்சிகளின் பாதிப்பு இன்னமும் எங்களில் பலருக்கு இன்னமும் உண்டு.
எங்களது அடையாளங்களை வெளிப்படுத்த தயக்கம். இலங்கையர் அல்லது தமிழர் என்று சொல்லிக் கொள்ள தயக்கம் உள்ளது. இதன் மற்றொரு தாக்கம் வெள்ளை மோகம். ஏனக்கு தெரிந்த பல குடும்பங்களில் பிள்ளைகள் நல்ல நிறத்தில் இல்லாமல் அழகாக இல்லாமல் இருந்தால் அவர்களை ஒதுக்கும் தன்மை உள்ளது. இதனால் பல பிள்ளைகள் மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் பாதிப்பை வெளிப்படுத்தும் குறும் படமே சேடிசம்.
BRIAN HAN, LEANNE McADAMS, DEREK RIDER, VANESSA RODRIGUES ஆகியோர் நயனியுடன் இப் படத்தை உருவாக்குவதில் கைகோர்த்துள்ளனர். இப் படத்துக்கான ஆய்வுகளை VANESSA RODRIGUES செய்துள்ளார்.
இப் படம் எங்களுக்குள் உள்ள வெள்ளை மோகத்தை பதிவுசெய்துள்ளது. எங்களது சமூகத்தில் மாத்திரமல்ல பல சமூகங்களில் இது உள்ளது. ஜமெய்க்காவிற்கு ஒரு தடவை சென்றிருந்த போது கறுப்பின மக்களிடையே இந்த வேறுபாட்டை காணக்கூடியதாகவிருந்தது. அங்கிருந்த இந்தியர்களுக்கு கறுப்பின மக்கள் மீது நம்பிக்கையில்லை. இதனை Malcolm Gladwell தனதுBLACK LIKE THEMஎன்ற கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். The Harvard sociologist Mary C. Waters நியு யோர்க் நகரில் செய்த ஆய்வொன்றில் மேற்கிந்திய கறுப்பின மக்களைவிட வேலைத்தளங்களில் ஆபிரிக்க கறுப்பின மக்கள் மீதே அதிக விருப்பம் காணப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளார். Malcolm Gladwell இங்கிலாந்தில் பிறந்து வோட்டலோ நகரில் இருந்து சுமார் 15கி.மீ தூரத்தில் உள்ள Elmira என்ற சிறிய ஒன்ராரியோ மாநகரில் தனது சிறுமைக் காலத்தைக் கழித்து ரொரன்ரோ பல்கலைக் கழக சரித்திர பட்டதாரி. வோசிங்டன் போஸ்ட் பின்னர் நியுயோர்;க்கர் சஞ்சிகைகளில் பல கட்டுரைகளை எழுதிவருகின்றார். இவரது தாய் ஒரு ஜமெய்க்கன், தந்தை ஸ்கொட்டிஸ்.
நயனி இப் படத்தில் இரு ரொரண்ரோ பல்கலைக்கழக பேராசிரியர்களின் கருத்துக்களை கேட்டுள்ளார். ஒருவர் பேராசிரியர் Hira Singh. இவர் வெள்ளை மோகத்துக்கான காரணம் காலனித்துவ ஆட்சி ஏற்படுத்திய பாதிப்பு என்கின்றார். இதற்கும் மேலாக இராமன் வெள்ளை நிறத்தையுடையவராகவும், இராவணன் கொடுங்கோலான் கறுப்பு நிறத்தவராகவும் உள்னர். எனவே இது புராண காலத்தில் இருந்தே ஏற்படுத்தப்பட்டது என்பது திரைப்படக் குழுவினரின் கருத்து.
அடுத்து மேற்கிந்தியவியல் பேராசிரியர் Camille Ramdwar Hernandez
http://www.frmthegrdup.com/2010/10/27/documentary-shadeism-by-nayani-thiyagarajah/
2.
“நிறவாதம் பாதிக்கும். நிழலியம் நிலைபேறுடையதாக்கும்”
நயனியுடன் சில நிமிடங்கள்
இப் படத்தின் இயக்குனர் நயனி தியாகராஜாவுடனான பேட்டி இது.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இப் பேட்டி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பத்திரிகையியல், திரைப்படவியல் போன்றவற்றிக்கு பொதுவாகவே எமது பெற்றோர் முன்னுரிமையளிப்பதில்லை. அதுவும் பெண்களால் என்றால் அதற்கு தனி மரியாதை. சமூக விதி முறைகளை மீறி நயனியை பத்திரிகையியல் துறையை தேர்ந்தெடுக்க உற்சாகமளித்த பெற்றோருக்கு எமது பாராட்டுக்கள். எமது சமூகத்தில் புரையோடியிருக்கும் மிக நுண்ணிய சமூக குறைபாடான நிழலியம் பற்றிய பதிவு ஒன்றை திரைப்படவடிவில் கொணர்ந்துள்ளார் நயனி.
ரதன்: நீங்கள் பத்திரிகையியலை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
நயனி: இரண்டு பிரதான காரணங்கள் முதலாவது உள்ளார்ந்த உணர்வுகளை கதைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள சொற்கள், சப்தம், ஒளிப் படிமங்கள் சிறந்தன. மக்களை தாங்களது நிலையளவுருக்கு அப்பால் சிந்திக்க வைக்கவேண்டும். எமது அன்றாட வாழ்வில் நாங்கள் பார்த்திருக்காத, கேட்டிருக்காத மக்களது கதைகளை சம்பவங்களை பதிவில் வைத்திருக்க வேண்டும். இவை ஏற்படுத்தும் கருத்துக்களை மக்களை உலகைச் சுற்றி சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் செய்யும். இரண்டாவது காரணம் ஒரு தமிழப் பெண்ணாக, நிறம் கொண்ட பெண்ணாக எமது கதைகளை பதிவு செய்ய வேண்டும். எமது சமூகத்தின் பிரதிநிதியாக தேவைப்படும் வெளிநாட்டு வெளியில் செயல்படவேண்டும். இவற்றில் நான் முக்கிய பங்காற்றவேண்டும்.
ரதன்: நீங்கள் பத்திரிகையியலை தேர்வு செய்ய உங்களுக்கு ஆதரவு வழங்கியோர் யார்?
நயனி: தொடர்ச்சியாக எனது பெற்றோரியின் ஆசியும் ஆதரவும் உண்டு. எனது சகோதரன் நண்பர்கள் உறவினர்கள் தொடர்ச்சியாக ஆதரவு வழங்குகின்றனர்.
ரதன்: நிறவாதத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
நயனி: நிறவாதம் தொடர்ச்சியாக எம்மை முன்னோக்கி செல்லவும், கட்டியெழுப்பவும் தடையாகவுள்ளது. நிறங்கொண்ட மனிதர்களை இது தொடர்ச்சியாக பாதித்துள்ளது. நீண்ட சரித்திரத்தில் தொடர்ச்சியாக நீதியற்று மனிதாபற்று நடாத்தப்பட்டுள்ளார்கள். நிறவாதம் ஏதாவது ஒரு வடிவில் பாதிப்பில்லாமல் இருப்பதை நான் பார்ப்பேனா என நினைக்கவில்லை. ஆனால் தொடர்ச்சியாக நாங்கள் தனிப்பட்ட முறையிலும் அமைப்புரீதியிலும் போராடவேண்டும்.
ரதன்: நிறவாதத்தையும் நிழலியத்தையும் எவ்வாறு பிரித்துப் பார்க்கின்றீர்கள்?
நயனி: நான் நம்புகின்றேன் இவற்றை அவசியம் பிரித்துப் பார்க்கவேண்டும். அதே சமயம் இவற்றிக்கான தொடர்பையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நிறவாதம் இனங்களுக்கிடையே உள்ள நிறத்தால் பாகுபாட்டையும் நீதியின்மையும் ஏற்படுத்துவது. நிழலியம் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் நல்ல நிறத்துக்கு சலுகைகளையும் முன்னுரிமையையும் கடும் நிறம் கொண்டோருக்கு பாகுபாட்டையும் நீதியின்மையையும் காட்டுவதே பிரதான வேறுபாடு. எனினும் இந்த இரு “இயம்” களும் விடுபடமுடியாத தொடர்புகளையும் கொண்டுள்ளன. நிறவாதம் பாதிக்கும். நிழலியம் நிலைபேறுடையதாக்கும் தொடர்ச்சியாக பேணப்படும். நிறவாதத்துக்குள் பாதிக்கப்பட்ட இனத்துக்குள் மெல்லிய நிறம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் நிறவாத தன்மை கொண்ட அதிகாரத் தன்மையை ஏற்படுத்துகின்றது.
ரதன்: நிழலியலை உங்களது படத்துக்கு கருவாக்க காரணமென்ன?
நயனி: நீண்ட காலமாக வெளிப்படுத்தப்படாத பல இனங்களுள் உள்ள இந்த வேறுபாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதே. எமது குடும்பங்களுள் உள்ள இந்த வேறுபாட்டை சந்தித்தவள் என்ற வகையிலும் குழந்தையில் இருந்து பெண்ணாக வளரும் பொழுது கண்கூடாக பார்த்த இநத அநீதியின்மையை மற்ற இனங்களுக்குள் உள்ள இந்த வேறுபாட்டையும் இணைத்து வெளிப்படுத்தல் அவசியம் எனக் கருதினேன். எனக்கு கிடைத்துள்ள வளங்களையும் எனக்கு பின்னால் ஆதரவு வழங்குவோரையும் இணைத்து இயல்பாக மக்களை சென்றடையக் கூடிய ஊடகத்தினூடாக வெளிப்படுத்துவது நல்லது என நினைத்தேன்.
ரதன்: நீங்கள் படத்தில் அடையாளங்காட்;டிய இனங்கள் ஒவ்வொன்றிலும் பல்வேறுபட்ட உள்ளார்ந்த வேறுபாடுகள் (உதாரணம்: சாதி…); உள்ளன. இவற்றை எவ்வாறு வரிசைப்படுத்துவீர்கள்?
நயனி: எனது ஆய்வுகளின் பிரகாரமும், உரையாடல்கள் மூலமும் நான் அறிந்து கொண்டது நிழலியம் இனக் குழுக்களுள் கலாசாரத்தினுள் வேரோடியுள்ளது. ஆன்மாவினு;ள்ளும் உள்ளது. நாம் எம்மை எவ்வாறு பார்க்கின்றோம் என்பதிலும் நாம் வெளிப்படுத்தும் நம்பிக்கையிலும், நாம் மற்றவர்களை எவ்வாறு பார்க்கின்றோம் என்பதிலும் எமக்கு வழங்கப்படும் சலுகைகளை எவ்வாறு பார்க்கின்றோம் எவ்வாறு குழந்தையிலும் பெரியவர்களாகவும் வளர்கின்றோம் என்ற முறையிலும் இதன் பாதிப்பு தங்கியுள்ளது. இது எங்கள் எல்லோரையும் பால், கலாச்சாரம் சந்த்தி என்ற பலவற்றினுள்ளும் பாதிக்கும் ஒரு விடயம்.
ரதன்: இந்த படம் ஏன் முக்கியம் என நினைக்கின்றீர்கள்?
நயனி: இந்த விவரணக் குறும்படம் முக்கியமானது என கருதுகின்றேன். இது விவாதத்துக்கான, உரையாடலுக்கான கருப்பொருளை கொண்டுள்ளது. எமது குடும்பங்களுக்குள் இந்த நிழலியம் பற்றிய விடயத்தை உரையாடுவதற்கும் இவ் விடயத்தை மீறி முன்னேறுவதற்கும் தடையாகவுள்ளவற்றை வெளிப்படுத்துகின்றது. எமது சமூகத்தினுள் நிழலியம் பற்றி நாம் உரையாடுவதில்லை. இதனால் இப் பிரச்சினைக்கு சமூக கலாச்சார உரையாடல்களில் உரிய இடம் கொடுப்பதில்லை. இப் படத்தின் மூலம் நண்பர்கள் மத்தியில் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் முகம் தெரியாதவர்கள் மத்தியில் நிழலியம் பற்றி உரையாடல்கள் இடம் பெற வழிவகுக்கின்றது. எங்களுக்கு பல நாடுகளில் இருந்து Australia, Jamaica, Costa Rica, and across North America ஈ-மெயில்கள் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பல் வேறு பட்ட மக்கள் தங்களது அனுபவங்களை கதைகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இப் படத்தை குடும்பத்துடன் பார்ப்பதன் மூலம் நிழலியம் பற்றிய உரையாடல்கள் இடம் பெற்றுள்ளது. அவர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் இவ்வாறான உரையாடல்கள் இடம் பெறும் என. இதற்கு ஒரு சந்தர்ப்பத்தை இப் படம் கொடுத்துள்ளது. இப் படம் திரையிடப்பட்ட இடங்களில் நாங்கள் கூட இவ்வாறான உரையாடல்கள் மூலம் மேலும் செழுமைப்பட்டுள்ளோம். மக்கள் இவ் விடயம் பற்றி காட்டும் அக்கறை இவ்வாறான விடயம் பதிவு செய்யப்படுவதற்காக காத்திருந்ததாகவே தெரிகிறது. நான் நினைக்கின்றேன் இப் படம் நிழலியம் பற்றிய உரையாடலை நிற மனிதர்களிடையே உரையாடல்களை உருவாக்கியுள்ளது. இது இப் பிரச்சினையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஏதுவாக்கியுள்ளது.
ரதன்: இப் படம் உருவாக்க உங்களுக்கு ஆதரவு வழங்கியோர் யார்?
நயனி: ரைசன் பல்கலைக் கழக ஊடகவியல் துறை, Lost Lyrics, anitafrika! dub theatre, Manifesto Community Projects, Schools Without Border யின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டது. Nadia Alam, Muginga Antonio, Natasha Daniel, Jade Lee Hoy, Amanda Parris, Maanusha Senthilkumar ஆகிய குடும்பத்தினர் தங்களது கதைகளை எம்முடன் மனந்திறந்து பகிர்ந்து கொள்ளாவிட்டால் இப் படம் சாத்தியமாக இருக்காது. கடைசியாக ஆனால் இறுதியாகவல்ல தயாரிப்பு குழாமில் உள்ள பின்வருவோரின் கடின உழைப்பின்றி உருவாக்கியிருக்க முடியாது Brian Han, Derek Rider, Leanne McAdams, and Vanessa Rodrigues.
.
ரதன்: அடுத்து என்ன செய்வதாக உத்தேசித்துள்ளீர்கள்?
நயனி: நிழலியம் பற்றி ஒரு முழு நீள படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். எனவே அடுத்த 18 மாதங்கள் இந்த விவரண குறும்படத்தை மேலும் விரிவாக்குகின்றோம். ஒரு நாடக அரங்க நாடகராக, புகைப்படக் கலைஞராக நிழலியத்தை வௌ;வேறு ஊடக முறைகள் மூலம் வெளிக்கொணர விரும்புகின்றேன். அனைத்து ஊடகங்கள் மூலமும் இப் பிரச்சினையின் பன்முகத்தை தன்மையை வெளிப்படுத்துவதன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட வழிவகுக்கும்.