நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து மாகாணத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து 6 பேரை குத்திய ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இப்போது அவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும் ஐ.எஸ். அமைப்பின் பால் ஈர்க்கப்பட்டு இந்த கொடூரச் செயலை செய்துள்ளதாகவும் தெரிவந்துள்ளது.
நியூசிலாந்தின் நார்த் ஐலேண்டு மாகாணத்தில் உள்ள ஆக்லாந்து நகரில் நியூலின் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த மார்க்கெடுக்குள் கத்தியுடன் புகுந்த ஒரு வாலிபர் அங்கிருந்தவர்களை சரமாறியாக கத்தியால் தாக்கினார். இதில் 6 பேர் காயம் அடைந்தனர். இந்த கொலை வெறித்தாக்குதலை நிகழ்த்திய நபரை போலீசார் சுற்றி வைத்து சரணடையச் சொல்லிய போதும் அவர் தாக்குதலைத் தொடர 60 நொடிக்குள் போலீசார் அவரை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிகிறது.
இத்தாக்குதல் தொடர்பாகப் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் :-இதை ஒரு திவீரவாதத் தாக்குதல் எனக் குறிப்பிட்டார். இஸ்லாமிக் ஸ்டேட்ஸ் தீவிரவாதக் குழுவால் ஈர்க்கப்பட்டு அந்த நபர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இது வெறுப்புணர்வு நிறைந்த செயல். தவறான செயல்” எனக் குறிப்பிட்டார்.
2019-ஆம் ஆண்டு நியூஸ்லாந்து மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்ட நிலையில், இத்தாக்குதல் அந்நாட்டில் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
இலங்கையில் சமீபத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் திவீரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இலங்கையர் ஒருவர் ஐ.எஸ் அமைப்பால் உந்தப்பட்டு நியூசிலாந்து நாட்டில் தாக்குதல் நடத்தியிருப்பது அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.