Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாளை மாலை சென்னைக்கு அருகில் புயல் கரை கடக்கும்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகில் மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுக்க மழை பெய்து வருகிறது. சென்னையில் மீண்டும் மழை பெய்யத்துவங்கியுள்ளது. இதனால் தண்ணீர் வடிந்த பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சேரத்துவங்கியுள்ளது.

இதனிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரம் ஸ்ரீஹரிகோட்டா இடையில் இன்று இரவோ அல்லது நாளை காலையோ கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் இந்த  காற்றழுத்த தாழ்வு மையத்தால் கடும் காற்று வீசக்கூடும், மேலும் சென்னையில் 20 செண்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்யக் கூடும் என்று சிகப்பு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

Exit mobile version