Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாம் தமிழர் பரப்பிய வதந்தி- ஆயிரக்கணக்கான பெண்கள் சாலைமறியல்!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஆலை இங்கி வருகிறது. இங்கு சுமார் ஐந்தாயிரம் பெண்கள் குறைந்த கூலிக்கு பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்து  வந்து பணி செய்கின்றனர். இவர்களை தொழிற்சாலை நிர்வாகம் தங்கவைத்து வருகிறது. ஆனால் இவர்களுக்கு தரமான உணவை பாக்ஸ்கான் ஆலை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சுகாதாரமற்ற உணவை உண்ட சில பெண்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள். இதற்கிடையில் 8 தொழிலாளர்களைக் காண வில்லை என்றும் நான்குபேர் உணர்வு அருந்தி இறந்து விட்டதாகவும் வதந்திகள் பரவியது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலை நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தினார்கள்.  வதந்திகள் மேலும் மேலும் பரவ அவர்கள் பெங்களூரு சென்னை நெடுஞ்சாலையை மறித்து போரட்டத்தில் இறங்கு நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பின்னர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உட்பட மாவட்ட ஆட்சியர் சென்று பெண்களுடன் போராட்டம் நடத்தி போராட்டத்தை வாபஸ் பெற வைத்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கும் பல மணி நேர போக்குவரத்து பாதிப்பிற்கும் காரணம் வாட்சப்பில் பரவிய வதந்தி. இந்த வதந்தியை நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் பரப்பியிருக்கிறார். வதந்தியை வைத்தே அரசியல் செய்து வரும் நாம் தமிழர் கட்சி ஆபத்தான கட்சியாக மாறி வருகிறது.

Exit mobile version