Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன் காஷ்மீர் தலைவர்!

ஜம்மு காஷ்மீர் சிறப்பதிகாரச் சட்டம் நீக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக அந்த நிலமே சிதைக்கப்பட்டு விட்டது.மாநில அந்தஸ்து கூட அங்கு வாழும் மகக்ளுக்கு வழங்கப்படவில்லை.

மேலும் சமீபத்தில் ஹுரியத் மாநாட்டுக்கட்சியின் தலைவர் சயத் அலி கிலானி உயிரிழந்தார். அவரை உடலை அடக்கம் செய்ய உறவினர்களை அரசு அனுமதிக்கவில்லை. இணையம் துண்டிக்கப்பட்டு மக்கள் முடக்கப்பட்டார்கள். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட மெகபூபா முப்தி, “மறைந்த ஒருவரின் இறுதிச் சடங்கை நடத்த குடும்ப உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் இங்கு குடும்ப உறுப்பினர்கள் இறுதிச்சடங்கை நடத்த அரசு அனுமதிக்கவில்லை. குறிப்பாக கிலானியின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தியா மிகப்பெரிய தேசம், இது அதன் கலாச்சாரத்துக்கு எதிரானது” எனத் தெரிவித்திருந்தார்.

பின்னர் அவர் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மெகபூபா முப்தி, “ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் உரிமைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படுகிறது. ஆனால், காஷ்மீர் மக்களின் உரிமைகளை வேண்டுமென்றே மறுக்கிறது. நான் இன்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். காஷ்மீர் நிர்வாகத்தின் கருத்துப்படி காஷ்மீரில் இயல்புநிலை இல்லை. இயல்புநிலை இருப்பதாக கூறும் அவர்களின் போலித்தனத்தை வெளிக்காட்டுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

பாஜகவுடன் காஷ்மீர் தலைவர்கள் கூட்டணி வைக்க அஞ்சிய போது பாஜகவுடன் துணிச்சலாக கூட்டணி வைத்து முதல்வர் ஆனவர் மெகபூபா முப்தி. பின்னர் அவரது ஆட்சி பாஜகவால் கவிழ்க்கப்பட்டது. காஷ்மீரின் இன்றைய நிலைக்கு மெகபூபா முப்தியே பெரும் காரணம். இன்று அவர் நிலையே பரிதாபத்திற்குரியதாகி விட்டது.

Exit mobile version