Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நவ-29 முதல் அன்றாடம் நாடாளுமன்றம் முற்றுகை- விவசாயிகள் அறிவிப்பு!

இந்திய வேளாண்துறையை  தனியார் மயமாக்கும் முயற்சியாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து ஓராண்டாகிறது. இந்த ஓராண்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விவசாயிகளும் வேளாண் சட்டங்களை கைவிடக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

பஞ்சாப்,அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த போராட்டங்கள் கடந்த பல மாதங்களாக திவீரமாக நடந்து வருகிறது. இந்த போராட்டங்களின் ஓராண்டு நிறைவையொட்டி டெல்லி அரியனாஅ எல்லையில் உள்ள சிங்கூவில் பல விவசாயிகள் சங்கங்கள் ஆலோசனையில் ஈடுபட்டன. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் நவம்பர் 29-ஆம் தேதி முதல் 500 விவசாயிகள் அன்றாடம் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவது என முடிவெடுக்கப்பட்டது.

குளிர்கால கூட்டத்தொடர் துவங்க இருக்கும் நிலையில் விவசாயிகள் அறிவித்துள்ள முற்றுகைப் போராட்டம் மத்திய அரசை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. சென்ற ஆண்டு நடந்த முற்றுகைப் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த நிலையில் விவசாயிகள் மீண்டும் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

Exit mobile version