Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நடுநிலையென்னும் பாவனைகள் –அ.ராமசாமி

மேடைப்பேச்சு , எழுத்து, ஊடக விவாதம் போன்ற பொதுவெளிப்பேச்சுகளில் தனிநபருக்குள்ள எல்லைகளை அறிந்துகொள்ளவேண்டியது ஒவ்வொருவரது கடமையும் ஆகும். தெரிந்தே மீறும்போது வரப்போகும் பலனையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும், பொதுநலனை முன்வைத்தே தனிநபர்களின் சொல்லாடல்கள் இருந்தன என்றாலும் எல்லைகளை மீறுவதற்கு எவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடாது. ஒருவருக்குப் பொருளியல் பாதுகாப்பு உள்ளது என்பதற்காகவும் சமயம், சாதி, இயக்கம், கட்சி போன்ற அமைப்புகள் பாதுகாப்பளிக்கும் என்பதற்காகவும் எல்லைகளைத் தாண்டிப் பேசுவது கட்டுப்படுத்தப்படவேண்டும்.

கட்டுப்படுத்துவது என்பதே அதிகாரத்தின் இயக்கம் எனப் பார்க்கவேண்டியதில்லை. தனிநபராகவும் அமைப்பின் சார்பாளராகவும் கட்டுப்பாடுகளை முன்மொழியலாம். கட்டுப்படுத்துவது என்பதில் பல படிகளை இருக்கின்றன; இன்னும் கூட உருவாக்கலாம். ஒரு கூற்று கருத்தல்ல; வசை, அவதூறு, தனிநபர் எல்லைக்குள் அத்துமீறி நுழைவது இது எனச் சுட்டிக்காட்டி எச்சரிப்பது எளிய முதல்படி. அதனை உணராமல் தொடர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு எச்சரிக்கைகளைத் தரவேண்டும். உணர்ச்சிகரமான கண்டனம் கூட ஒருவித எச்சரிக்கையே. எச்சரிக்கைக்குப் பின்னரும் தொடர்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையே பலனளிக்கும். அரசியல் சட்டம் வழங்கும் நிலைப்பாட்டின்படி எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்தபின்பு கைது நடவடிக்கைகள் என்னும் கட்டுப்பாட்டுகளைச் செய்தே ஆகவேண்டும். முன்னெச்சரிக்கைகளும் கண்டனங்களும் இல்லாமல் கைது நடவடிக்கைகள் அதிகாரமீறலாகும். திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிக்கு வந்தபின் கருத்துச் சொல்லிகளாக அறியப்பட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கருத்துரிமையைத் தாண்டிய நடவடிக்கைகள் என்பதைச் சட்டமும் காவல்துறையும் நிரூபிக்க வேண்டும்; நீரூபிக்க முடியாத ஒன்றல்ல என்பதை அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளே உறுதிசெய்யும். வழக்குகள் விரைவாக நடத்தப்படும் நிலையில் கிடைக்கும் தண்டனைகளும் காட்டிவிடும். இதெல்லாம் தெரிந்தபின்னும் நடுநிலையாளர்கள் பாவனைகள் செய்யவேண்டிய அவசியத்தைத் தொலைக்கத்தான் வேண்டும்

Exit mobile version