Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தோல்வி : விஜி (லண்டன்)

தோல்வி

முப்பது ஆண்டுகள்
தனித்து
தரித்திருந்த ஆயுதங்கள்
தேசம் விட்டு அகன்றபோது…….

நிலங்கள் மேலும்
பற்றைகளால் மூழ்கடிக்கப்படுகின்றன!

மனிதரால் நிரம்பியிருந்த வீடுகள்
கறையான் புற்றெடுத்து
மேலும் பாழடைந்து போகின்றன!

குடிசைகளின் உரிமையாளர்கள்
தெருவுக்கு வெற்றிகரமாய்
வந்து விட்டனர்!

ஒரு தயக்கமும் யோசனையும் இன்றி
புத்தபெருமானுக்கும்
நமது நிலங்களில் குடியேற
பிடித்துப் போயிற்று!

விசுவமடு கிணற்றில்
நேற்று
கடைசியாய் எறியப்பட்ட குழந்தை
தோல்வியின் நிஐங்களை
முகத்தில் அறைகிறது!

அவர்களின் தேசியம்
முத்திரை வெளியிட்டு
ஆர்ப்பரித்து கூச்சலிட

சவீந்தர சில்வாவை
யுத்தம்
கௌரவப்படுத்திற்று!!

Exit mobile version