Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தோல்வியை தவிர்க்க உத்தரபிரதேச மாநிலத்தை இரண்டாக ப் பிரிக்க பாஜக திட்டம்!

அடுத்த ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமும் இந்தியாவில் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் மாநிலமுமான உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பாஜக முதல்வராக யோகி ஆதித்யநாத் என்ற கோரக்பூர் ஆஸ்ரம சாமியார்  உள்ளார். இவரது ஆட்சியின் கீழ் உத்தரபிரதேசம் மிக மோசமான விளைவுகளைச் சந்தித்தது. லஜ் ஜிகாத் தாக்குதல் கொலைகள், மாட்டுக்கறி தாக்குதல் கொலைகள், என பலவிதமான சர்ச்சைகளில் சிக்கினார் யோகி.

இந்துத்துவம், ராமர்கோவில் போன்ற விவகாரங்களை வைத்தும் உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக வலுப்பெற நினைத்தாலும் கடந்த காலங்களில் ராமர்கோவில் பிரச்சனை கை கொடுத்தது போன்று இனி கொடுக்காது. ராமர்கோவில் கட்டப்பட்டு வருவதையும் இந்தி பேசும் மக்கள் பெரிதாக எடுக்கவில்லை.கொரோனா உயிரிழப்புகள், சிகிச்சை இன்மை, பொருளாதார இழப்பு என மாநிலத்தில் கடும் அதிருப்தி நிலவுகிறது. மே மாதம் அங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக படு தோல்வியடைந்தது  சமாஜ்வாதி கட்சியே அதிக தொகுதிகளில் வென்றது.

மிக முக்கியமாக அயோத்தி, லக்னோ போன்ற பாஜகவின் கோட்டைகளிலேயே பாஜக தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இப்போது நடைபெறும் சட்டமன்ற  தேர்தலிலும் பாஜக தோற்று விடும் என்பதால் உத்தரபிரதேச மாநிலத்தை இரண்டாகப்  பிரிக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரித்து பூர்வாஞ்சல் என்ற தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் எனப்து அம்மாநிலத்தில் உள்ளவர்களின் கோரிக்கை. அதை நிறைவேற்றுவதன் மூலம் தலித் மக்கள் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் சிதறி தாங்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என நினைக்கிறது பாஜக.

Exit mobile version