வேலையில்லாத் திண்ட்டாட்டம் அதிகரிக்கும் நிலையில் தனியார் நிறுவனங்களில் தொழிலாலர்கள் மீதான ஒடுக்குமுறை மிரட்டல் என்பன அதிகரித்துள்ளன. பல நிறுவனங்கள் தொழிலாலர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்துவருகின்றன. குறிப்பாக குறைந்த வருமானமுள்ள உழைப்பாளிகள் மீதான ஒடுக்குமுறை, வேலையிழப்புத் தொடர்பான அச்சம் என்பன பெரும் சமூகப்பதற்றத்தை ஏற்படுத்தும் என மற்றொரு ஆய்வு தெரிவிக்கின்றது.
முன்னெப்போதும் இல்லாதவாறு தொடர்ச்சியாக வீழ்ச்சியடையும் பிரித்தானியர்களின் வாழ்க்கைத் தரம் மீட்சியடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என IFS தெரிவித்துள்ளது.