பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 106-வது பிறந்த நாள் விழாவும், 51-வது குருபூஜையும் வருகிற 30-ந்தேதி அவர் பிறந்த பசும்பொன் கிராமத்தில் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டைப் போடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 (1) தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது.
ஆதிக்க சாதி வெறியைத் தூண்டி தமிழகத்தில் சாதி அரசியல் நடத்திவரும் ராமதாஸ் புதிய புரளி ஒன்றைக் கிளப்பியுள்ளார். முத்துராமலிங்கத் தேவர் என்ற ஆதிக்க சாதி வெறியனுக்கு விழா எடுக்க வேண்டும் என ராமதாஸ் என்ற சாதி வெறியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
1957- இல் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனை தனக்கு சமமாக நாற்காலியில் அமர வைத்து பேச வைத்த காரணத்தாலும், அந்த முதுகுளத்தூர் கலவரத்துக்கு பின்னான சமாதானக் கூட்டத்தில் இமானுவேல் சேகரனது வாத திறமையாலும் வெறியூட்டப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் வெளியே வந்து ஒரு பள்ளப்பய கூட உட்கார்ந்து பேச வச்சுட்டீங்களே என தனது அடியாட்களிடம் சொல்லவே மூன்று நாள் கழித்து பரமக்குடியில் வைத்து இமானுவேல் சேகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதன் பின்னர் சாதி ரீதியான மோதல் தீவிரமடைந்தது. தேவர் சமூகத்தில் உள்ள சாதி வெறியர்களால் முத்துராமலிங்கத் தேவர் பிழைப்பு வாதத்திற்காகக் கடவுளாக்கப்பட்டார்.
உலகில் இந்தியாவில் மட்டும் தான் மனிதனை பிறப்பை முன்வைத்துக் கூறு போடும் சாதீயம் கோலோச்சுகிறது. இவர்கள் இந்தியர்கள் என்று மார்தட்டிக்கொள்வதற்குக் கூட அவமானப்படுவதில்லை.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழக அரசின் காவல் துறை பிறப்பித்துள்ள உத்தரவின்படி, குருபூஜை விழா நடைபெறும் பசும்பொன் கிராமம் உட்பட மாவட்டம் முழுவதும் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வாடகை வாகனங்களிலும், இரு சக்கர ஊர்திகளிலும் பொதுமக்கள் வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் தலைவர்கள் 3-க்கும் மேற்பட்ட ஊர்திகளில் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கடந்த 50 ஆண்டுகளாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை பொலிவில்லாத, சாதாரண விழாவாக நடத்த வேண்டிய சூழலை தமிழக அரசு திட்ட மிட்டு உருவாக்கி வருகிறது. இது பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவரை கடவுளாக வணங்கும் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்தும் செயல் என்பது மட்டு மின்றி, தேசியத் தலைவராக திகழும் தேவர் திருமகனாருக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அவமரியாதையும் ஆகும்.
தேவர் பெருமகனாரின் குரு பூஜை விழா அரசு விழாவாகவும், முதல்-அமைச்சர்கள், முன்னாள் முதல் – அமைச்சர்கள் மற்றும் அரசியல் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்கும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. அத்தகைய விழாவிற்கு தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். குருபூஜையை அமைதியாக நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று தமிழக அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
லட்சக்கணக்கில் மக்கள் கூடும் விழாக்கள் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இயல்பானது தான். அத்தகைய கட்டுப்பாடுகள் விழாவின் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, விழாவின் கோலாகலத்தை குலைக்கும் வகையில் இருக்கக் கூடாது. எனவே தேவர் குரு பூஜை விழாவிற்கு விதிக்கப்பட்டுள்ள 144(1) தடை யாணை உள்ளிட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு நீக்க வேண்டும்.
கடந்த காலங்களில் தேவர் குருபூஜை விழா எவ்வளவு சிறப்பாக கொண்டாடப்பட்டதோ, அதே அளவு உற்சாகத்துடன், இந்த ஆண்டும் கொண்டாடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
News FM