Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேனீக்களை காவு கொள்ளும் விஷச தாவரம் மலையக பிரதேசங்களில் : சை.கிங்ஸ்லி கோமஸ்

நீர், நிலம்,தீ, வான்,வளி எனும் யாவும் மனித குலம் பயனுற என்ற நம்பிக்கை தற்பொழுது சிதைவுற்று வருவதனை காணலாம் இது போலவே கல்வி மருத்துவம் என்பன சமூகசேவைகள்hக காணப்பட்டன திறந்த பொருளாதார கட்டமைப்பும் நுகர்வுகலாச்சாரமும் இவற்றினை வணிகமயப்படுத்தி இருப்பதனை யாராலும் மறுக்க முடியாது.

உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக துறைகளால் கட்டுப்படுத்தபபட்டுள்ள இவ்வாறானவற்றுடன் தண்ணீரும் விலை கொடுத்து வாங்கும் பொருள் பட்டியலில் இடம் பெறுகிறது இவற்றுடன் ஒப்பிடும் போது மனித குலம் தேனை தனது வாழ்வியலுடன் இணைத்து நாகரீகமானது அனைவரும் அறிந்த விடயமாகும்.

எமது நாட்டிலும் தேன் அத்திய அவசிய பொருளாக காணப்பட்டுள்ளது உணவாக மருந்தாக பூஜை பொருளாக கிருமி நாசினியாக அழகுசாதன பொருளாக காணப்பட்ட தேன் தொன்று தொட்டு உணவுகளை பதப்படுத்தி வைக்கவும் நீண்ட நாட்களுக்கு பிறகும் உணவு வகைகள் அதே சுவையுடனும் உணவு வகைகளில் காணப்படும் தாது பொருட்கள் குறைவடையாமலும் வைத்திருக்கும் வல்லமை தேனுக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த தேனை எமக்கு வழங்கும் தேனீக்களின் உழைப்பும் தேனை சேகரிப்பதற்கான விஞ்ஞானவியல் களஞ்சிய முறையும் மனிதனது சிந்தனைக்கு எட்டாத நுணுக்கங்களாகும்.அந்த வகையில் மலையக பிரதேசங்களிலும் மூன்று பிரதானமான தேனீக்களை காணமுடிகின்றது பொந்து தேன்,மரங்களில் காணக்கூடிய மலைத்தேன்,சாதாரண தேனீக்களைவிட உருவத்தில் சற்று பெரிய பம்பரதேன் என்பவையாகும் இவற்றுக்;கும் இன்றைய நாட்களில் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வனவலங்கு பாதுகாப்பு அதிகார சபையினர் கூறுகின்றனர்.

மலையக பிரதேசங்களில் காணப்படும் எட்ரிசியா மஞ் சியா என்னும் தாவரம் தேனீக்களுக்கு ஒவ்வாத ஒரு வித நச்சுத்தன்மையினைக் கொண்ட தாவரம் என்பதனை வன விலங்கு பாதுகாப்பு அதிகார சபையின் அட்டன் கிளைக் காரியாலயத்தின் அதிகாரி ரேஞ்சர் மகேந்த்ர பண்டார தெரிவித்தார்.இந்த மரத்தின் இலைகளிலோ மலர்களிலோ வந்து அமரும் தேனீக்கள் அந்த இடத்திலேயே இறந்து விடுவதானால் மலையக பிரதேசத்தில் தேனீக்களின் எதிர்காலம் கேள்வியாகியுள்ளதை அவதானிக்கலாம்.

சில காலங்களுக்கு முன் எமது சுற்றுப் புறச் சூழலினை அவதானிக்கும் போது சாதாரண கடுகு செடிகளில் வந்து அமர்ந்து ஒய்யாரமாய் தேன் பருகிச் செல்லும் தேனீக்கள் எங்கே என்று நாம் சிந்திக்கத் தவறி விட்டோம் தேனீக்கள் மாத்திரம் அல்ல எமது பிள்ளைகளின் எதிர் காலம் பற்றிய சிந்தனையினையும் கூட நாம் கவனிக்காமல் இருப்பது வேடிக்கையாகும்.

1974 ஆம் ஆண்டுஉணவு பாதுகாப்பு என்னும் சொல் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தின் மிக முக்கிமான கருப் பொருளாக காணப்பட்டது இன்று உலகம் முகம் கொடுக்கும் உலக உணவு பற்றாக் குறைக்கான எதிர்வு கூறலாக 1974 ம் ஆண்டின் கருப் பொருள் காணப்பட்டுள்ளது உணவு பாதுகாப்பு தொடர்பாக எமது மூதாதையர்கள் பின்பற்றி வந்த செயற்பாடுகளில் தேனில் ஊர வைத்த மாமிசங்களும்

பழங்களும்,தினை மா போன்ற உணவு பதார்த்தங்களும் பாலைக் கூட கெடாமல் பல நாட்களுக்கு பாதுகாக்கக் கூடிய அற்புத சக்தியினைக் கொண்டது தேனின் உபயோகம்பற்றிய அறிவினை பெற்றும் மனிதன் அவற்றினை பிரயோகிக்காமல் பஞ்சத்தாலும் பட்டினியாலும் மடிந்து போவதானது நாகரீகம் அடையாத மனிதனது சிந்தனை முனைப்பானது இன்று மழுங்கி போயுள்ளதனை உணரலாம் 1980 ம் ஆண்டு எமது நாட்டின் சூழலியலாளர்கள்,மக்கள் அமைப்புகள்,மாணவர் அமைப்புகள் என்பன வெளிநாட்டு தாவரங்களான யுகலிப்டஸ்,பைனஸ் போன்ற தாவரங்களை பயிறிடுவதனை எதிர்த்து பல போராட்டங்களை செய்து வந்தனர் .

ஆனாலும் இவை தொடர்பான நடவடிக்கைகளை எவராலும் முன்னெடுக்கவில்லை எட்ரிசியா மஞ் சியா என்னும் தாவரம் தொடர்பாக வனபாதுகாப்பு அதிகார சபையினர் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரத்திற்கு ஒப்பாக தற்பொழுது கவலைப்படுகின்றனர்.

இலவசமாக கொடுத்தால் தடுமல் காய்ச்சலும் வாங்கி பெற்று கொளளும் எமது பண்பாடு அழிவையும் இலவசமாக பெற்று கொண்டுள்ளதனை இதனூடாக காணலம்.

1970ம் ஆண்டிற்கு பின்னான திறந்த பொருளாதார முறையினால் எமது நாடு முகம் கொடுத்த பல்வேறுபட்ட இன்னல்களுடன் நாசகார தாவரங்களும் முக்கிய இடத்தினை பெறுகின்றது இது போன்ற இயற்கை சம நிலையினை சீர்கெடுக்கக்கூடியதுவும் விசதன்மைக்கொண்டதுவுமான தாவரங்களை மக்கள் இனம் கண்டு அழித்தொழிக்க வேண்டும் என்பது அனைவரினதும் கடமையாகும்.

பேச்சு குரைபாடு உள்ள ஒரு சிறுவனுக்கு தொடர்ந்து தேன் வழங்கப்பட்டால் அவனுக்கு விரைவில்பேசும் சக்தி கிடைக்கும் எனறு நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள் இந்த தேனுக்கே ஆபத்து வரும் பொழுது பேசா மடந்தைகளாக மனிதன் இருப்பானேயானால் மனிதனை விட உணர்ச்சியற்ற ஜீவன் இந்த புவியிலே இருக்க முடியாது.இவற்றிற்க எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பலர்கூறிய போதும் பண்நாட’டு கம்பனிகளின் கைகளில் மூன்றாம் உலக நாடுகளின் கடிவாளங்கள் இருக்கும் வரை தண்ணீர் எவ்வாறு இன்று கொள்ளை லாபம் ஈட்டி தரும் நுகர்வு பொருளாக மாறியதற்கு அமைய தேன் மாத்திரம் அல்ல மழை காற்று சூரிய ஒளி கூட பணம் கொடுத்து வாங்கும் பொருட்களாக மாற இடம் கொடுக்காமல் இருக்க வேண்டியது இந்த நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

Exit mobile version