பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் முதல்வர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மும்பை தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள மத்திய-மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு செயல்படும் ‘தேசிய தீவிரவாத தடுப்பு மையம்’ நாட்டிற்கு அவசியமாகிறது என்று கூறியுள்ளார்.
மேலும், மாநில காவல்துறைக்கு பயங்கரவாதிகளைப் பற்றிய தகவல்கள் விரைவாக கிடைப்பதில்லை, பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைக்கு உடனடியாக பணிகளை மேற்கொள்ள என்சிடிசி உதவும். மும்பை தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பலப்படுத்த வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் சிதம்பரம் கூறினார்.
அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற தலையங்கத்தில் மறுக்கும் இவ்வாறான சட்டங்களை இலங்கை உட்பட பல பாசிச அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆயிரக்கணகானோர் விசாரணையின்றி தண்டனைக்கு உள்ளாக்கப்படும் இந்தியாவில் இந்த மையம் மேலும் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.