இதன் அட்டைப்படம் வித்தியாசமான சிந்தனைகளை தூண்டக் கூடியதாக காணப்படுகின்றது தோழர் விமலாதித்தன் திருகோனமலை சல்லிக் கிராமத்தில் தனது புகைப்படக் கருவிக்குள் சிறை எடுத்த படத்தினை முகப்புப் படமாகக் கொண்டு அதற்கான விலக்கத்தினையும் சிறப்புர இவ்வாறு வழங்கியுள்ளது மனித இருப்பினை பல்வகை காரணிகள் அழிக்க முற்படுவதும் பசுமையை தேடி நிற்கும் மரத்தின் ஒரு பாகம் எதிர்கால சந்ததியினரின் இருப்பிற்கான நம்பிக்கையை காட்டும் வகையிலும் காணப்படுகின்றது.
வர்க்கமும் சழூகமும் வர்க்க நிலைப் பாடுகளும் இவற்றை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெரும் இலக்கியங்களும் இலக்கிய அமைப்புகளும் அவரவர்களின் வர்க்க நிலைப் பாடுகளுக்கு அமைய தோற்றம் பெற்றுல்லது. சிலதனிமனிதர்களது வெளிப்பாடுகளும் கூட அவர்களது வர்க்க குனாம்சங்களுக்கு அமையவே வெளிப்படுவதனை அவர்களது படைப்புகளுக்கூடாக காணலாம். இதற்கமைய தேசியகலை இலக்கியப் பேரவையின் 39 ஆவது ஆண்டு சிறப்பு மலர் புது வசந்தம் தே.க.இ.பேரவையின் கொள்கைகளுக்கு அமைய சற்றும் தளராது மானிட இருப்பு என்னும் தலைப்பின் கீழ் பிரசுரிக்கப் பட்டுள்ளது.
தே.க.இ.பேரவையின் தோற்றத்திற்காகவும் அதன் பன்முக வளர்ச்சிக்காகவும்தங்களது பங்களிப்பினைத் தந்தஆரம்ப கர்த்தாக்களான பேரதசிரியர் கைலாசபதி கவிஞர் முருகையன் செல்லையூர் செல்வராசன் உட்பட பலரையும் நன்றியுடன் ஞாபகமூட்டியிருப்பதுடன் தே.க.இ.பேரவையின் சஞ்சிகையான
தாயகம் சஞ்சிகைக்கான ஆக்கங்களை வழங்கிய படைப்பாளிகளையும் நன்றியொடு ஞாபகப் படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பேரவையின் தலைவர் பேராசிரியர் தில்லை நாதனின் வழிகாட்டளிலும் பேராசிரியர் சிவ சேகரத்தின் நெரியால்கையிலும் தே.க.இ.பேரவையின் நாடு தலுவிய உறுப்பினர்களின் படைப்புக்களையும் தாங்கி வந்திருப்பதுடன் தே.க.இ பேரவையின் கொழும்புக் கிளை உறுப்பினர்களின் உடல் உழைப்பினாலும் வெளிவந்திருக்கின்றது.
சிறுகதைகள்
சஞ்சிகையின் சிறுகதைகள் நாகதாழி,கருவிக்கு செம்புலன் கணனி, தனிமையில் காட்டில்,டுரிட்டோவும் நவ தாராளவாதமும்,என்னும் சிறுகதைகளுடன் ஜயத்திலக்க கம்மல்வீர சிங்கள மொழியில் எழுதிதிக்குவல்லை கமால் தமிழாக்கம்செய்துள்ளஆர் யூ ஓல் ரைட் என்னும் கதையுடன்உயிரோட்டமானவையாகவும் மானிட இருப்புடன் விடுதலையின் பலப் பாகங்களையும் தொட்டுக்காட்டுபவையாகவும் காணப் படுகின்றன.
கவிதைகள்
கவிதைகளில் கருத்துப் பகிர்ந்தவர்கள் நூலின் தேவையரிந்தும்,காலத்தின் தேவையறிந்தும் படைத்துள்ளனர் இவற்றின சில துளிகள் அவதானிப்பிற்காய்-கந்தக நெடி கண்ணி வெடி முட்கம்பிகள் முகாம்களாகவும் இருக்களாம் என்னும கவி வரிகளை பள்ளைகளின் உலகம் என்னும’; கவிதையிலும் -தப்பது செய்தே தலைவர் ஆனவர் தலையும பொடிப் பட குப்புர வீழா உயர்வது பெறவே உழைப்பவர் உலகு என்று எப்படியெனிலும் என்னும் கவிதையும் பாடப்படடுள்ளது இது போன்றுகர்த்தாவே அவளின் கழுத்தை காக்க வேண்டும் தாலியின் பாரமும் தலைமேல் சுமக்கும் புருஷனின் பாரமும் என்னும் கவிதை வரிகள் உடைப்புகள் என்னும் கவிதையிலும் காணலாம் இவை கவிதைகளுக்குல் மூழ்கியெடுத்த சில முத்துக்களாகும் இவைத்தவிர இன்னும் பல காத் திரமான கவிதைகளும் புது வசந்தத்தில் இடமபெற்றுள்ளது.
காத்திரமான பல கட்டுரைகளுடன் வெளிவந்திருக்கும் புது வசந்தம் எல்லோராலும் வாசிக்கப் பட வேன்டிய சஞ்சிகையாகும்.