Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தூக்குத் தண்டனையைத் தொடர வேண்டும்- முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.

உலகெங்கிலும் பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது.இந்தியாவிலும் நீண்டகாலமாக மனித உரிமையாளர்கள் மரணதண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிற நிலையில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் தொடர வேண்டும் என, தேசிய மனித உரிமைக் கழகத் தலைவரும், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியுமான கே.ஜி.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது, கொடிய குற்றங்களுக்காக சில அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தூக்கு தண்டனை சட்டப்பிரிவு தொடர வேண்டும்.பல நாடுகளில் தூக்கு தண்டனை அளிக்கும் சட்டத்தை ரத்து செய்துள்ளனர். ஆனால் நமது நாட்டில் பல்வேறு வகை குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொள்ள வேண்டும்.தூக்கு தண்டனை சட்டத்தை ரத்து செய்தால் அது சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிக்க வழிவகுத்து விடும். தூக்கு தண்டனை தொடர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இது தேசிய மனித உரிமைக் கழகத்தின் கருத்து அல்ல என்றார்.

Exit mobile version