Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

துரை தயாநிதி ஏன் தலைமறைவாக இருக்கிறார் என்று தெரியவில்லை: கருணாநிதி

கிரானை‌ட் முறைகேடு தொட‌ர்பாக ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் மு.க.அழ‌கி‌ரி‌யி‌ன் மக‌ன் துரை தயா‌நி‌தி தலை மறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை எ‌ன தி.மு.க. தலைவர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு கருணா‌நி‌தி அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், கிரானைட் வழக்கில், மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு நீதிமன்றம் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவிற்கு ‘வாரண்டு’ பிறப்பித்திருக்கிறதே, என்ன செய்வார்கள்? எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்ப‌ப்ப‌ட்டது.
இத‌ற்கு ப‌தி‌ல் ‌அ‌ளி‌த்த கருணா‌நி‌தி, வழக்கறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று, சட்டப்படி செயல்படுவார்கள் எ‌ன்றா‌ர்.
திமுகவின் முக்கிய நிர்வாகிகளைப் பயமுறுத்திவிட்டால், வரவிருக்கும் தேர்தலில் சுலபமாக வெற்றிபெற்றுவிடலாம் என முதல்வர் ஜெயலலிதா எண்ணுகிறார். அது எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது தேர்தல் முடிந்த பிறகுதான் தெரியும்.
கேள்வி: வழக்கில் தேடப்படுவர்கள் தலைமறைவாக இருப்பது சரியா?
பதில்: தலைமறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை முறைப்படி நீதிமன்றத்தின் மூலம் அணுகுவார்கள் என்றார்.

Exit mobile version