Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

துனிசிய மக்கள் போராட்டமும் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சியும் : கோசலன்

துனிசியாவில் நடந்த மக்கள் புரட்சி உலகில் மக்கள் போராட்டங்களுக்கான நம்பிகையின் புதிய தோற்றுவாயாக அமைந்திருப்தாக உலகின் ஏகாதிபத்திய நாடுகளே தவிர்க்கவியலாது ஒத்துக்கொள்கின்றன. ஒரு இளைஞனின் தற்கொலையைத் தொடர்ந்தே போராட்டங்கள் நகரத்தை நோக்கி, கிராமங்களிலிருந்து நகரத்தொடங்கின என்பதெல்லாம் உண்மைதான். யூ ரியூப் ஈறாக பெரும்பாலான இணையத் தளங்கள் துனிசியாவில் தடைசெய்யப்பட்டிருந்தன. பேஸ் புக்கை முற்றாகத் தடைசெய்வதற்குரிய கால எல்லைக்கு முன்னமே தற்கொலை குறித்த தகவல்கள் இளைஞர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்துவிட்டன.

இளஞர்களோடு கைகோர்த்துக்கொண்ட மக்கள் குறிப்பாகக் கிராமப்புறத் தொழிலாளர்கள் சாரி சாரியாக யாரும் எதிர்பார்க்காத வகையில் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

துனிசியாவில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் திடீரென விழித்தெழுந்து போராட்டம் நடத்தியதாக ஒரு விம்பத்தை மேற்கின் ஊடகங்கள் உருவமைத்து உலகுக்கு வெளிப்படுத்தின.

ஐரோப்பிய நாழிதழ்களின் ஆய்வுகளில் டிச்ம்பர் மாத ஆய்வுகளில், குறிப்பாக எகனமிஸ்ட், டைம்ஸ் போன்ற இதழ்களில் துனிசியாவில் போராட்டங்கள் தீவிரமடைவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறின. ஐ.எம்.எப் துனிசியப் பொருளாதாரம் ஆரோக்கியமான வளர்ச்சி நிலையில் இருப்பதாக சான்றிதழ் வழங்கியது.

துனிசியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக நிகழ்திய போராட்டங்களும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் மக்கள் மத்தியில் அரச எதிர்ப்பையும் நம்பிக்கையையும் வளர்த்திருந்தன.

ஊடக சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்ட இன்னொரு தேசமான துனிசியாவில் 1998 ஆம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தின் பின்னர் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நான்கு வருடங்கள் சிறையிலடைகப்பட்டனர். இவர்கள் துனிசிய தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சியைச் (Parti communiste des ouvriers tunisiens – PCOT, Tunisian Workers’ Communist Party) சேர்ந்தவர்கள் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு என்பதை சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

அல்பானியாவில் உருவான மாவோயிச வழிமுறையின் கீழ் ஒன்றிணைந்த பல அரேபிய ஐரோப்பிய மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சிகளுள் துனிசிய தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றாகும்.

இந்தக் கட்சியின் உறுப்பினர் என்ற சந்தேகம் மட்டுமே பல வருடங்கள் சிறைவாசம் அனுபவிப்பதற்கும், சித்திரவைதைக்கு உட்படுத்தப்படுவதற்கும், காணாமல் போவதற்கும் போதுமானதாக இருந்தது. PCOT இன் பேச்சாளராக இருந்த ஹம்மாஅ ஹமாமி கடந்த வெள்ளி(14/01/2011) விடுதலை செய்யப்பட்டார். போராட்டங்களைத் தணிப்பதற்காக தப்பியோடிய துனிசிய அதிபர் மேற்கொண்ட நடவடிக்கை இது. இவரின் விடுதலை PCOT மக்கள் ஆதரவுத் தளத்தைக் கொண்டிருந்ததைத் கோடிட்டுக் காட்டுகிறது.
17/11/2011 தேசிய ஐக்கிய அரசை அமைப்பதற்கான அழைப்புவிடுக்கப்படாத இரண்டு கட்சிகளுள் உம் ஒன்றாகும். சர்வாதிகாரி பென் அலியின் அரச இயந்திரம் எந்த மாற்றமுமின்றி தனது இருப்பைப் பேணிக்கொண்டு, ஜனநாயகம் குறித்துப் பேசமுடியாது என்று ஹமாமி கூறுகிறார். முதலில் பென் அலியின் கட்சி முழுமையாக அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

துனிசியாவில் புதிதாக இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் குறுந்தேசிய, மத வாததைத் தூண்டும் புதிய அமைப்பான துனிசிய இஸ்லாமிய இயக்கத்தைக் கண்டனம் செய்துள்ள ஹமாமி, அதிகாரத்திற்கு எதிரான மக்களின் ஒன்றிணைவைக் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகச் சிதைக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

17/12/2011 அன்று அமரிக்க ஹிலரி கிளிங்டன் துனிசியாவும் ஏனைய அரபு நாடுகளும் நவீன மயப்படுத்தப்பட வேண்டும் என ஆரம்பித்து மறைமுகமான இஸ்லாமிற்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்திருக்கிறார். அதனை உள்வாங்கிக் கொள்ளும் இஸ்லாமிய மத அடிப்படைவாதக் கட்சிகள், கம்யூனிசப் போரட்டங்களையும் ஒருங்கு சேர சிதைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஹிலரி கிள்ங்டனின் ஆலோசகர்களுக்கு தெரிந்திராத ஒன்றல்ல.

எது எவ்வாறாயினும் இஸ்லாமிய நாடுகளில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அடிப்படை வாதத்தை உடைத்துக்கொண்டு கம்யூனிசத்தை முன்வைக்கின்ற அளவிற்கு அரபு நாடுகளில் மார்க்சிய நோக்கு வளர்ச்சியடைந்துள்ளது. இலங்கையில் கூட மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது துனிசியாவின் வெற்றி நமக்குக் கற்றுத்தருகிறது.,

Exit mobile version