Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

துக்குத் தண்டனைக்குத் தடை உத்தரவு, ஜெயலலிதா அடிபணிந்தார் – மக்கள்போராட்டத்திற்கு வெற்றி

தூக்குத் தண்டனைக்கு இன்று தடை உத்தரவு பிறப்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் பேர் நீதிமன்ற வாசலில் உணர்வுபூர்வமாகக் குழுமியிருக்க 8 வாரங்களுக்கு இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டங்களுக்குக் கிடைத்த மக்கத்தான வெற்றி இது. வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே குழுமியிருந்த ஆயிரக்கணக்கான் தமிழக மக்கள் தீர்ப்பு வந்ததும் ஆர்ப்பரித்தனர். நேற்றுத் தமிழகம் முழுவது நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் மூவரின் தலையெழுத்தை மட்டுமல்ல தமிழக மக்களின் அரசியல் திசைவழியையும் தீர்மானிக்கும் என்பது திண்ணம்.
ஜெயலலித சட்ட சபையில் இன்று தீர்மானம் கொண்டுவந்துள்ளார். தனக்கு அதிகாரம் இல்லை என்று நேற்றுக் கூறியிருந்தாலும் இன்று மக்களின் உணர்வுகளை மதித்து தீர்மானம் கொண்டுவருவதாகத் தெரிவித்தார். அத் தீர்மானத்தில் ஆளுனரைத் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோருவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆக, தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படும்.
இது தமிழக மக்களின் போராட்டத்திற்கும் உணர்வுகளுக்கும் கிடைத்த வரலாறு காணாத வெற்றி! புலி ஆதரவு இனவாதிகள் மூலையில் முடங்கியிருக்க புதிய இளைஞர்கள் தமிழகம் எங்கும் பல சந்தர்ப்பங்களில் தன்னிச்சையாக நடத்திய ஆர்ப்பாட்டங்கள் எல்லம் இந்த வெற்றியைக் குவித்துள்ளது.
இதைக் கேட்கும் புலம் பெயர் தமிழர்கள் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஜெயலலிதாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Exit mobile version