Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தீவிரம் அடைந்த விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகள் நாடு முழுக்க ரயில் மறியல் போராட்டங்களை திவீரப்படுத்தியுள்ளார்கள்.

இந்த போராட்டங்களில் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை அன்று மதியம் 12 மணி முதல் மாலை  4 மணி வரை நான்குமணி நேர ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த போராட்ட அறிவிப்பையொட்டி நாடு முழுக்க படைகள் ரயில் நிலையங்களில் குவிக்கப்பட்டது. டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம்,பீகார் உட்பட பல மாநிலங்களில் ராணுவம் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட  விவசாயிகளோ தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டங்களை நடத்த பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் பீகார் போன்ற மாநிலங்களில் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

விவசாயிகளின் போராட்டத்தால் ரயில் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் தொலை தூர ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். “வேளாண் சட்டங்களை ரத்து செய்யா விட்டால் நாங்கள் இன்னும் போராட்டங்களை திவிரப்படுத்துவோம்” என்று அறிவித்துள்ளார்கள்.

Exit mobile version