Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தீர்வு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம், கிடைக்காவிட்டால் சர்வதேசத்திடம் முறையிடப்போகிறாராம் சம்பந்தன்!

இனப்பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம், கிடைக்காவிட்டால் நாம் சர்வதேசத்திடம் முறையிடுவோம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று புதிய அரசியலமைப்புத் தொடர்பாக கிழக்கு மாகாண மக்களுக்குத் தெளிவூட்டும் கூட்டமொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் திருகோணமலையில் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தின் ஆரம்பத்திலேயே மக்கள் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, எங்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய உங்களை எங்களால் தொடர்பு கொள்ளமுடியவில்லையெனத் தெரிவித்து  கூட்டத்தை நடத்தவிடாது தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் இரா. சம்பந்தன் உரையாற்றியிருந்தார். இதன்போது, தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கவேண்டுமெனவும், ஆதரவு வழங்கினால் மாத்திரமே தமிழ் மக்களது பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளமுடியும்  அதற்கான வழியையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், அரசியலமைப்பின் இறுதி வரைபை தாம் தமிழ் மக்களின் அனுமதியுடனேயே ஆதரிப்போம் எனவும், அவ்வாறு எமது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் சர்தேசத்திடம் முறையிடுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சித் தேர்தலில் மீண்டும் தமது ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சம்பந்தன் போடும் நாடகத்தினை மக்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருக்கின்றனர். இதன் காரணமாகவே கூட்டத்தின் ஆரம்பத்திலேயே தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

Exit mobile version