Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தில்ஷன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை

அப்பாவிச் சிறுவன் ‌தி‌ல்ச‌ன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து விரைவில் மேல்முறையீடு செய்ய‌‌ப்போவத ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ராம்ராஜ் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌ ‌தீவு‌த்‌திட‌லி‌ல் உ‌ள்ள இராணுவ வீரர்களுக்கான குடியிருப்புக்குள் பாதாங்கொட்டை பறிப்பதற்காக சென்ற சிறுவன் தில்ஷனை கட‌ந்த ஆ‌ண்டு ஜூலை 3ஆ‌ம் தே‌தி ஓ‌ய்வு பெ‌ற்ற இராணுவ ‌வீர‌ர் ரா‌‌ம்ரா‌‌ஜ் பா‌ண்டிய‌ன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றா‌ர்.

‌இ‌ந்த வழ‌க்‌கி‌ல் இ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌‌ளி‌த்த செ‌ன்னை ‌விரைவு ‌நீ‌திம‌ன்ற‌ம், ஓ‌ய்வு பெ‌ற்ற இராணுவ அ‌திகா‌ரி ராம்ராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து விரைவில் மேல்முறையீடு செய்ய‌ப்படுவதாக ராம்ராஜின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

Exit mobile version