Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திருச்சி காவல் அதிகாரி கொலையில் ஈடுபட்டவர்கள் சிறுவர்கள்!

திருச்சி மாவட்டம்  திருரம்பூருக்கு  உட்பட்ட நாவல்பட்டு காவல் நிலையத்தில் பூமிநாதன்  என்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 50 ஆகிறது.

நேற்று முன் தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது பூலாங்குடிகாலனி என்ற இடத்தில் அடையாளம் தெரியாத மூவர் இரு சக்கர வாகனத்தில் ஆடுகளை வைத்துக் கொண்டு சென்றனர். அவர்களை நிறுத்த முயன்ற போது அவர்கள் நிற்காமல் செல்ல அவர்களை தன் வாகனத்தில் துரத்திச் சென்றார் பூமிநாதன். கீரனூர் பள்ளத்துப்பட்டி  அருகில் உள்ள ரயில்வே பாலம் அருகே அவர்கள் மூவரும் பூமிநாதனிடம் சிக்க பூமிநாதன் தன் காவல்நிலையத்திற்கு தகவல் சொல்லி விட்டு அவர்களை செல்ல விடாமல் தடுத்து வைக்கிறார்.

அதில் மணிகண்டன் என்பரும் மேலும் இருவரும் சேர்ந்து காவல்துறை அதிகாரியிடம் தங்களை விடுமாறு தகறாரு செய்ய அவரோ அவர்களை செல்லவிடாமல் தடுக்க சற்றும் எதிர்பாராத வகையில் ஆடுகளை வெட்ட வைத்திருந்த அறிவாளை எடுத்து பூமிநாதனின் பின்னந்தலையில் சராமரியாக வெட்டி விட்டு தப்பி விடுகிறார்கள். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பூமிநாதன் மரணித்து விடுகிறார்.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட பூமிநாதன் குடும்பத்திற்கு ஒரு கோடி ருபாய் இழப்பீடும் வீட்டில்  ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர். பின்னர் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த கொலையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. நேற்று குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர். அதில் மணிகண்டன் என்பவருக்கு 19 வயதாகிறது. அவர்மீது ஏற்கனவே வழக்கு உள்ள நிலையில் இக்கொலையில் கைதாகியுள்ள மேலும் இருவரில் ஒருவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மிக இளவயதுடைய சிறுவனாகவும், இன்னொரு குற்றவாளி 9-ஆம் வகுப்பு படிப்பவராகவும் உள்ளார். இவர்கள்தான் இக்கொலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் கூலிப்படையினர் நிகழ்த்தும் பல்வேறு கொலைகளில் கூலிக்காக கொலை செய்கிறவர்கள் சிறுவர்களாக உள்ளார்கள்.

Exit mobile version