தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., இளைஞரணி நடத்திய மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டவர் திடீரென தீ வைத்துக்கொண்டு உடல் கருகினார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தி.மு.க., இளைஞரணியினர் இன்று மாலை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். சென்னை கிண்டியில் மனிதச் சங்கிலியில் கலந்து கொண்ட இளைஞரணி தொண்டர் ஒருவர், திடீரென்று தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்து, உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் பலனின்றி உயிரிழந்தார்.
சிவப்பிரகாசம் (55) என்ற அவர், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு செட்டில்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது.
திமுக பொருளாளர் மு க ஸ்டாலின் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள்.