ஊடகங்களை அறியப்பட்ட குற்றவாளிகளினூடாக அதிகாரங்கள் தமது கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தும்
நிகழ்ச்சிப் போக்கு பாசிசம்
கோலோச்சும் நாடுகளின் பொதுவான போக்காக அமைகின்றது. அரபு நாடுகளிலும் ஆப்கானிஸ்தானிலும் கூட இதை ஒத்த நிலைகளைக் காணலாம். இலங்கையில் ஊடகங்கள் பலவற்றை நேரடியாக மிரட்டிக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மேர்வின் டி சில்வா மகிந்த ராஜபக்சவினால் ஊடகத்துறை அமைச்சராக்கப்பட்டது அறியப்பட்டதே.
இந்த நிலையில் கே.பி என்ற குமரன் பத்மநாதன் இலங்கையின் இரண்டு முக்கிய ஊடகங்களையும் பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றையும் தனது வியாபார முதலீட்டின் ஊடாகக் கொள்வனவு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தினக்குரல் நாழிதளும், குகநாதனின் யாழ் ஒலி தொலைக்காட்சியும் குமரன் பத்மநாதனின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரவிருப்பதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே வேளை பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிச் சேவையிலும் கே.பி முதலிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.