Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திட்டமிட்ட அழிப்பின் பின்புலம் : நீதிமன்றத்திலிருந்து…

ch1

சுன்னாகம் நிலத்தடி நீர் கழிவு எண்ணெயால் நஞ்சாக்கப்பட்டமை இனஅழிப்பு

மல்லாகம் நீதிமன்றில் பொதுச் சுகாதார பரிசோதகரால் தெரிவிப்பு

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவெண்ணை கலந்து வலிகாமப்பகுதி நீர்வளம் நஞ்சாக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் நலன் சார்ந்து மல்லாகம் நீதிமன்றில் தெல்லிப்பழை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இராஜமேனகனால் 2014.10.30 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் (19.04.2016) அழைக்கப்பட்ட போது பிரசன்னமாகயிருந்த வடமாகண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் வடமாகாண சபையால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவானது ஐங்கரநேசன் என்ற தனிநபரால் அமைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் ஐங்கரநேசனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் மஜிஸ்ரேட் நீதி மன்றுக்கு இல்லை என்றும் கூறி வழக்கிலிருந்து தப்ப முயற்சித்தார்.

இதனால் மன்றினால் அமைச்சர் ஐங்கரநேசனால் முன்வைக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பில் வினா எழுப்ப முடியாமல் போனது.
இந்நிலையில் பொதுமக்களது அடிப்படை உரிமையான தண்ணீர் நஞ்சாக்கப்ட் நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ளும் நோக்கில் தெல்லிப்பழை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இராஜமேனகன் கௌரவ நீதி மன்றிறன் கவனத்திற்கு பின்வரும் விடயங்களைக் அறிக்கையாக சமர்ப்பித்தார்.

சுன்னாகம் பகுதி கிணறுகளில் நிலத்தடி நீரில் கழிவொயில் பரவிய பிரச்சினையானது சுன்னாகம் தெற்கு கலைவாணி சனசமூக நிலையத்தால் 2011 டிசம்பர் மாதம் உடுவில் சுகாதார அதிகாரிக்கும் வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்கும் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொக்கணைக் குடிநீர் விநியோகத்தில் கழிவெண்ணை மணம் உணரப்பட்டமையால் மாதிரிகள் பெறப்பட்டு கழிவு ஒயிலானது நியம அழவிலும் பார்க்க உயர்வாக இருந்தமையால் பொக்கணையிலிருந்தான கந்தரோடைக்கான குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுன்னாகம் பிரதேச சபையினர் அனைத்து திணைக்களங்களையும் உள்ளடக்கி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு அதன் இறுதியில் மின்சார நிலைய வளாகத்தைப் பரிசோதனை செய்தனர். அதன்போது நொதேண் பவர் கொம்பனியானது எந்த ஒரு கழிவு முகாமைத்துவமும் இல்லாமல் இயந்திரங்களில் இருந்து வெளியேறும் கழிவு ஒயிலை நிலத்திலே வெளியேற்றியமை கண்டறியப்பட்டது. அது தொடர்பான படங்கள் ஏற்கனவே மன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் 2012.11.01 ஆம் திகதி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கழிவொயில் நீரில் கலப்பதானது சீர் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டதை அடுத்து 2014.10.30 ஆம் தகதி தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் வழக்குத் தொடரப்பட்டு மக்களின் உயிரைக் காக்கும் பொருட்டு குடிநீர் விநியோகத்தைச் செய்யுமாறு நீதிமன்று கட்டளையிடும் வரை மக்கள் ஒயில் கலந்த நீரையே பருகி வந்துள்ளனர் என்று மன்றுக்கு அறியத் தந்தனர்.

அதேவேளை கழிவு ஒயில் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் குறித்த கொம்பனி தொடர்பாக தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் தலைவர் அவர்களால் குறித்த மாற்றத்துக்குக் காரணமான நொதேண் பவர் கம்பனியினை சீல் செய்யுமாறு கம்பனியின் முகாமையாளருக்கு எழுதப்பட்ட கடிதமும் மன்றின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

அதேவேளை கௌரவ நீதிபதியவர்கள் குறித்த மின்சார நிலைய வளாகத்தை பார்வையிட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டமைக்காக கௌரவ நீதிபதி இப்பகுதிக்கு நேரடியாகச் சென்று அவதானித்து தீர்ப்பினையும் வழங்கியிருந்தார். குறித்த கொம்பனியை தற்காலிகமாக மூடுமாறு 11 பொதுமக்களால் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவினைப் பிறப்பித்தார்.

கழிவெண்ணைப் பிரச்சினை தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை கடிதங்கள் மற்றும் அறிக்கைகள் பரிமாறப்பட்டனவே ஒழிய ஆக்கபூர்வமான எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

எனவே மக்கள் இந்தக் குடிநீரைப் பருகுவதால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் என்பன ஏற்பட்டால் இதற்கு அரசாங்கத்தால் குடிநீர் விநியோகத்துக்கும் நீரை சுத்தம் செய்யவும் ஏற்படும் செலவைவிட மிக அதிகாமான செலவு இந்நோய்களுக்காக அரச செலவு செய்ய வேண்டி ஏற்படும் என்றும் தெல்லிப்பழை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இராஜமேனகன் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதேநேரம் கழிவு ஒயில் கலந்த நீரைப் பருகுவதால் பிறப்பியல் குறைபாடு ஏற்படும் என்றும் மந்த புத்தி ஏற்படும் என்றும் மருத்துவர்களும் நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளதைக் குறிப்பிட்டு இதனால் எதிர்காலத்தில் ஒரு இனம் அழிகின்ற துர்ப்பாக்கிய நிலைமைக்கு இட்டுசெல்லும் எனவே காலம் தாழ்த்தாது கூடிய விரைவில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உரிய கட்டளையை ஆக்குமாறு கௌரவ நீதிமன்றை வேண்டினார்.

மன்றில் பிரசன்னமாகியிருந்த தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமார் குடிநீர் விநியோகம் சீரற்ற முறையில் வழங்கப்படுகிறது என்றும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் தொடர்பாக எம்மால் எதுவுமே கூற முடியாத நிலையில் இருப்பதாகவும் எங்கிருந்து நீர் பெறப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்ற விடயமும் தங்களுக்குத் தெரியாது என்றும் அதேவேளை சுற்றாடல் அதிகார சபைக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை நீர் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்றினால் கட்டளையிடப்பட்ட நிலையில் எமக்கு அது தொடர்பில் அறிக்கையோ ஆவணங்களோ கிடைக்கப் பெறுவதில்லை என்றும் தெரியப்படுத்தினார்.

அதே நேரம் மீள் குடியேற்றப்பகுதிகளில் கழிவு எண்ணை தொடர்பான எந்த ஒரு பரிசோதனையும் செய்யப்படவில்லை என்பதனையும் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு மாகாணசபையால் இன்று மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் மன்று மின்சார நிலையத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதே நேரம் சிறுநீரக நோய்கள், தோல் வியாதிகள், புற்றுநோய்கள் பிறப்பியல் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதையும் மன்றின் கவனத்திற்கு கொணர்ந்தார்.

மன்றில் இன்று பிரசன்னமாகியிருந்த உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி ஜெயக்குமார் ஜே.197 , ஜே.196 ஆகிய கிராம சேவையாளர் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை செய்வதாக தெல்லிப்பழை பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்ட சமர்ப்பணத்திற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார். தாம் மேலதிகமாக முன்னரே குடிநீர் விநியோகத்தை வழங்குவதாக மன்றுக்குக் கூறினார்.

2014 ஆம் ஆண்டு சித்திரை மாதப் பகுதியில் இப்பகுதிக்கு இப்பகுதி நீரையே பிரதேசசபை மூலம் வழங்கியிருந்தனர். தற்போது சுன்னாகம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள கிறேசர் லேன் பகுதிகளில் பல கிணறுகளில் வெற்றுக் கண்களால் ஒயில் படலத்தை அவதானிக்கத் தக்க நிலையில் இப்பகுதி மக்கள் தமது கிணற்று நீரையே அருந்திவரும் அவல நிலையில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரியின் கூற்றும் பொறுப்பற்ற செயற்பாடும் மன்றில் இருந்த பொது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.

Judge visit report 16.01.2015 pg.6

Judge visit report 16.01.2015 pg.5

Judge visit report 16.01.2015 pg.4

Judge visit report 16.01.2015 pg.3

Judge visit report 16.01.2015 pg.2

Judge visit report 16.01.2015 pg.1

Exit mobile version