Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திடீர் மழை வெள்ளக்காடானது சென்னை!

தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், இன்று காலை 11 மணியளவில் பெய்யத் துவங்கிய மழை இப்போது வரை கன மழையாக பெய்து வருகிறது.

இதற்கு முன்னர் பெய்த மழையிலேயே சென்னை திணறியது ஆனால் வெள்ளம் வடிந்து விட்டது. ஆனால் இன்று ஒரே நாளில் பெய்துள்ள மழை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் பேய் மழை என்பார்களே அப்படி ஒரு மழை சென்னையில் பெய்து வருகிறது.  காலை முதல் இப்போது வரை நிற்காமல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால்  சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, சேத்துப்பட்டு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை தலைமைச் செயலகத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் அங்குள்ள பணியாளர்கள் வெளியேறினார்கள். பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த மழை தொடர்பாக  தமிழ்நாடு வெதர் மேன் வெளியிட்டுள்ள செய்தியில்,

//5.30 மணிக்கே 200 மிமீட்டர் மயிலாப்பூரில் பெய்துள்ளது.. மழை இன்னும் நீடிக்கும். தி. நகர், ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் சாலைகளை தவிர்க்கவும். இன்னும் சில மணி நேரம் மழை பெய்யும். கிட்டத்தட்ட ஒரு மேக வெடிப்பை போல,cloud burst மழை பெய்து வருகிறது. மக்களே கவனம் தேவை.//

இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை இன்னொரு மழை பேரிடரை சந்திக்கலாம். என்பதால் மக்களிடம் அச்சம் நிலவுகிறது.

Exit mobile version