சமீபத்தில் நாடு முழுக்க 29 சட்டமன்ற தொகுதிகள் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியது. அதன் வரலாறு காணாத வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி தடை போட்டுள்ளதை இந்த தேர்தல் முடிவுகளில் காண முடியும். அஸ்ஸாம் மாநிலத்தைத் தவிற ஏனைய மாநிலங்களில் எதிர்க்கட்சிகளே வென்றுள்ளன. மேற்குவங்கத்தில் நடந்த தேர்தலில் பாஜக படு தோல்வி அடைந்துள்ளது. அதே போன்று மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,கர்நாடகம், இமாச்சல்பிரதேசம் என பாஜகவுக்கு தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளித்துள்ளன.
இந்து மதத்தையும் ராமரையும் வைத்தே தேர்தல்களில் ஒட்டி விடலாம் என்ற பாஜகவின் கனவுக்கு அடி விழுந்திருக்கிறது. வழக்கமாக முஸ்லீம்களை எதிரிகளாக சித்தரித்து அந்த போதையிலேயே இந்துக்களின் வாக்குகளைப் பெறும் பாஜகவின் வேகத்திற்கு ஒரு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத திண்டாட்டம், வறுமை போன்ற பிரச்சனைகளை இந்துக்கள் உணரத்துவங்கி உள்ளார்கள். இந்த தோல்விகளால்தான் பாஜக பெட்ரோல் டீசல் விலையை ஓரளவு குறைத்துள்ளது. ஆனால், இந்த விலை குறைப்பு அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்காது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சி எதனையும் உருவாக்கவும் இல்லை. மக்களிடம் அதிருப்தியே நிலவுகிறது.ஆனால், இந்த அதிருப்தியைகளை காங்கிரஸ் முழுமையாக அறுவடை செய்துள்ளதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
அது பல இடங்களில் சவாலான போட்டியை பாஜகவுக்கு கொடுத்துள்ளதே தவிற பாஜகவை புரட்டிப் போடும் அளவுக்கு வென்று விடவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல் தேசிய அளவில் பாஜக வலதுசாரிகளுக்கு எதிரான அணி ஒன்றை உருவாக்காமல் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பாளர்கள் என்று காங்கிரஸ் நம்பும் நிலமை. இவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று ராகுல்காந்தியை அறிவிப்பதில் நிலவும் தயக்கம் என காங்கிரஸ் பக்கம் ஏகப்பட்ட மைனஸ் பாயிண்டுகள் உள்ளன.
அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதுதான் நாடாளுமன்ற தேர்தலுக்கு உத்வேகமாக அமையும் என்ற நிலையில் காங்கிரஸ் தேர்தலுக்கு தயாராகிறதே தவிற பாஜக எதிர்ப்பு என்ற வகையில் வலுவான அணியை அமைக்கவில்லை. அதைத்தான் ஒன்று காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இடைத்தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காற்று எந்தப் பக்கம் வீசும் என்றும் வினவியுள்ளார். 30 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பற்றிய பகுப்பாய்வு சிந்தனையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்ட சிதம்பரம், அதில் 7 இடங்களிலும், அதன் அறிவிக்கப்பட்ட கூட்டணிக் கட்சிகள் 8 தொகுதிகளிலும் வென்றதாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் 8 இடங்களிலும், பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.