இலங்கை அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதியை தன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சிறைத்துறை அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார்.
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த உள் நாட்டு யுத்தம் காரணமான ஏராளமான தமிழ் அரசியல் கைதிகள் இலங்கை முழுக்க உள்ள சிறைகளில் அடைபட்டுள்ளனர். 2009 போர் முடிந்த பின்னர் இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்தது. இவர்களுக்கு சிறைக்குள் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறைக்கு தன் சகாக்களுடன் சென்றவர் அங்கு தமிழ் அரசியல் கைதி ஒருவரை முழந்தாளிடச் செய்து அவர் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக செய்திகள் வெளியாகின.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தனது சகாக்களுடன் சென்ற சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதியை முழந்தாளிடச் செய்து, அவரது தலையில் துப்பாக்கி வைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த மனிதத் தன்மையற்ற செயல் கடந்த 12-ஆம் தேதி இரவு நடைபெற்றதாக நாடாளுமன்ற உருப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அதனையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் உத்தரவின் பேரில் சிறைத்துறை அமைச்சர் தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.