
‘எமது இறுதி நோக்கம் தமிழீழம். அதனை விரைவில் உருவாக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாம் புலம்பெயர் மக்கள் மற்றும் தமிழக மக்களுடன் சேர்ந்து “தனித் தமிழ் ஈழத்தை உருவாக்குவோம், ஈழமே எங்கள் இறுதி நோக்கம்’’ என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வீக்கெண்ட் லீடர் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.