Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்நாட்டில் 99.8 சுகப் பிரசவங்கள்…ஆனால்!

பிரசவம் என்ற வார்த்தை  ஒரு பெண்ணில் பேருகாலத்தின் கடைசி நாட்களைப் பேசுகிறது. அதாவது குழந்தையை பிரசவிக்க இருக்கிற  காலத்தைக் குறிக்கிறது. பெரும்பாலும் பிரசவம் என்பது  புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் நிலை  குழந்தை பிறப்பு என்கிற அளவில்தான் உள்ளது. ஆனால், பிரசவம் என்பது இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்டது.ஒன்று ஒரு உயிர் பிறக்க வேண்டும் இன்னொன்று  தாயின்  உயிரைக் காப்பாற்றியாக வேண்டும்.

மருத்துவ வசதிகள் முன்னேற்றமடையாத அக்காலத்தில் வீட்டிலேயே பிரசவங்கள் நடந்தது எண்ணிக்கையில் அதிக அளவிலான  தாய்களும் பெண்களும் பிரசவ காலத்தின் போதே இறந்து போனார்கள். அவர்களின்  உயிர்களைக் காப்பதற்கான வசதி வாய்ப்புகளோ உயிர்காக்கும் மருந்துகளோ அக்காலத்தில் இல்லை. அதன் பின்னர்தான் மருத்துவ வசதிகள் மேம்பட்டு பிரசவகால மரணங்கள் தடுக்கப்பட்டன.

ஆனால், சிலர் குறிப்பாக தமிழார்வலர்கள் தமிழ் மரபு பாரம்பரிய வாழ்க்கை என்ற பெயரில் சுகப்பிரசவத்திற்கு திரும்புகின்றனர். பெரும்பாலும் இது போன்ற பிரசவங்களில் தாயும் கருவுற்றிருக்கும் குழந்தையும் இறந்து விடுகிறது. இதே போன்ற நிகழ்வுதான் சமீபத்தில் நடந்தது.

தமிழ்நாட்டில் 98.9 சதவிகித பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடக்கின்றன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒரு தலைமை மருத்துவமனை உள்ளது. மேலும் ஒவ்வொரு வட்டாரங்களிலும் மருத்துவமனைகள் போல பிரசவ காலத்திற்கான ஆரம்ப சிகிச்சை பிரசவம் பார்க்க ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பெரும்பலான பிரசவங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடக்கிறது. இது மேம்பட்ட நிலை.

இந்தியாவில் பேருகால மரணங்கள் தமிழ்நாட்டில்தான் மிகவும் குறைவு. காரணம் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தி வந்திருக்கிறார்கள்.

Exit mobile version