Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலைத் தொற்று சிறிது கட்டுப்பட்ட நிலையில்  இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், நேற்றைய பாதிப்பை விட இன்று 14 சதவீதம் அதிகரித்துள்ளது.   

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 263 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 30,196 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,31,39,981 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 338 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,41,749 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 40,567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,23,04,618 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று இன்று கொஞ்சம் அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1596, இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளார்கள். அரசு மருத்துவமனையில் 18 பேரும் தனியார் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளார்கள்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக மக்கள் கூட்டம் சந்தைகளில் அலை மோதுவதால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

Exit mobile version