32 பயணிகளை பலி வாங்கிய தமிழ்நாடு விரைவு ரெயில் தீ விபத்திற்குக் காரணம் ரெயில் பெட்டியில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து காரணமாக இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர் தெரிவித்துள்ளார். வெறும் ஊகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இந்தத் தகவலை ஏன் வெளியிட வேண்டும் என்று பரவலான சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஊழல் மற்றும் தரமற்ற சேவை காரணமாக இந்திய ரயில்வே உயிர்க்கொல்லிகளாக மாறியிருப்பதை மூடிமறைக்கும் வேலை இதுவோ எனச் சந்தேகம் எழுந்துள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர். தடயவியல் இயக்குனர் நாராயணமூர்த்தி கூறியதாவது:- தீ விபத்தில் எரிந்த ரெயில் பெட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியை ஐதராபாத்தில் உள்ள தடயவியல் நிபுணர் குழு பரிசோதனை செய்ததில் பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயணம் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆனாலும் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியாது. மேலும் சில ஆய்வுகளை மேற்கொண்ட பிறகுதான் விபத்திற்கான காரணம் குறித்து உறுதியாக சொல்ல முடியும்.