Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த்தாய் வாழ்த்து- இனி தமிழ்நாடு அரசின் மாநிலப்பாடலாக அறிவிப்பு!

இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது மரபு. ஆனால்  தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சி பீடாதிபதி விஜேந்திர சரஸ்வதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வழக்கு ஒன்றில் சமீபத்தில் தீர்ப்பளித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்கவேண்டும் என சட்டத்தில் இடமில்லை. நாம் தமிழ் மீது கொண்ட பற்றினால்தான் எழுந்து நிற்கிறோம். ஆனால் அனைவரும் அப்படி நின்றே ஆக வேண்டும் என்று எதுவும் இல்லை” என்றார்.

இந்த தீர்ப்பு கடும் சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்   தமிழ்த்தாய் வாழ்த்து இனி தமிழ்நாடு அரசின் மாநிலப்படாலக இருக்கும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகையில் மாற்றுத் திறனாளிகளைத் தவிற அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ர அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

துதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடும்போது இனி அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். இதிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை, பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு வாய்மொழியில் சொந்த குரலோசையில் பாட வேண்டும். 55 விநாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் மூன்றன் நடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,

“தனது மனோன்மணீயம் நாடகத்தில் தமிழ்த் தெய்வ வணக்கமாகச் சுந்தரனார் அவர்கள் இயற்றிய பாயிரப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்துப் போற்றினார் தலைவர் கலைஞர். அதற்கு மேலும் சிறப்பும் பெருமையும் சேர்க்கும் வகையில் இனி அப்பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது.

நீராரும் கடலுடுத்த எனும் மாநிலப் பாடல் பாடப்படுகையில், மாற்றுத்திறனாளிகள் தவிர, இனி மற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version