நேற்று குடியரசு நாள் விழா தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டது. அப்போது மத்திய ரிசர்வ் வங்கியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அப்போது ரிசர்வ் வங்க் அதிகாரிகள் சிலர் அப்பாடலுக்கு எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்தனர். பாடல் வணக்கம் முடிந்ததும் சில தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அவர்களிடம் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாவுக்கு ஏன் எழுந்து நிற்கவில்லை என்று கேட்டதற்கு, எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை.நீதிமன்றமே நிற்க வேண்டாம் என்றிருக்கிறது என்று திமிராக பதில் கூற அந்த அதிகாரிகள். தமிழ்த் தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடல் என்றும் அதற்கு மாற்றுத் திறனாளிகளைத் தவிற ஏனையோர் எழுந்து நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்றும் கூறினார்கள். அனால் அந்த அதிகாரிகள் அதனை ஏற்காமல் சென்றனர்.
அதிகாரிகள் திமிராக பதிலளித்த விடியோ வைரல் ஆக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.பெரும்பான்மை கட்சியினர் அதிகாரிகள் செயலுக்கு கண்டனம் தெரிவிக்க இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் உட்பட தமிழ் அமைப்புகள் ரிசர்வ் வங்கி முன்னால் ஆர்ப்பாட்டம் அறிவித்தனர். அந்த அதிகார்கள் மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில்,இன்று காலை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி நேரில் சந்தித்து வங்கி அதிகாரிகளின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
ஆனாலும் சமூக வலைத்தளங்களில் பலரும் அதிகாரிகளின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.