தமிழக மீனவர்கள் நான்கு பேர் காணாமற்போன பின்னர் சடலங்களாக மீட்கப்பட்டமையை துரதிர்ஷ்டமான சம்பவம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த போது அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இந்த மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்பதை சரியாக அறிய முடியாதுள்ளதுடன் மாநில அரசின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என்றார். . _