Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை உயர்ந்தது எப்படி?

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் இருந்து வந்த நிலையில் அவர் இப்போது மீன் வளத்துறை இணை அமைச்சர் ஆகியிருக்கிறார். அதனால் தமிழக பாஜக தலைவர் பதவி காலியானது. அந்த பதவிக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இது பாஜகவில் உள்ள சீனியர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை அந்த பதவியை ராஜிநாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு கூட அண்ணாமலையை யார் என்று தமிழகத்தில் எவருக்கும் தெரியாது. பசுமை விகடன் இதழில் இயற்கை விவசாயம், ஆடு வளர்ப்பது தொடர்பாக அண்ணாமலை என்ற நபரின் பேட்டி வெளியானது. அதை வைத்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக ட்ரோல் செய்யப்பட்டது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அண்ணாமலை பாஜகவில் தன் காலை வலுவாக ஊன்றினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் தோற்றார். என்றாலும் அவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர்களான தமிழிசை,ம்,முருகன், இப்போது அண்ணாமலை என எதிர்மறையான பரப்பரப்புகள் மூலமே இவர்கள் தலைவர்களாக உருவாகி வளர்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ சக்திகளுக்கு தலைவர்களை உற்பத்தி செய்து கொடுப்பதே சமூக வலைத்தளங்களில் புழங்கும் முற்போக்காளர்கள்தான்.

Exit mobile version