Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழகம் கேரளாவில் கொரோனா அதிகரிப்பு!

நாளை தமிழகத்தில் 9 முதல் பிளஸ் டூ வரை பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இன்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ளார்கள். கடந்த ஒரு மாதமாக கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில் இப்போது அந்த என்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தமிழக 16 ஆயிரத்து 809 பேர் கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளார்கள்.

முதல், இரண்டாம் அலைகளில் எங்கெல்லாம் கொரோனா தொற்று அதிகரித்ததோ அதே இடங்களில் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது. சென்னை, ஈரோடு, கோவை போன்ற இடங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கேரள மாநிலத்தில்  மிக அதிக அளவில் கொரோனா பரவல் உள்ளதால் இரவு நேர ஊரடங்கு கேரள மாநிலத்தில் அமல் படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநில எல்லைகளில் கொரோனா சோதனையை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரிப்பது பொது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version