Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழகத்தில் தேவாலயம் ஒன்று மீது தாக்குதல்!

வட இந்தியாவில் மசூதிகள், தேவாலயங்கள் மீது இந்து அமைப்புகள்  தொடர் தாக்குதல் நடத்துவது  பெரும் கலவரங்களுக்கும் இந்து அணி திரட்டலுக்கும் பயன்பட்டு வருகிறது.

2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த தாக்குதல்கள் நாடு தழுவிய அளவில் திவீரமடைந்து வந்தன. அந்த வகையில் தமிழ்நாடுதான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான ஒன்றாக இருந்து வந்தது.ஆனால் ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அதிமுக என்ற கட்சியைக் கைப்பற்றிக் கொண்ட பாஜக அதன் பலத்தில் நான்கு தொகுதிகள் வரை வென்றுள்ளது.

இப்போது தனது இந்துத்துவக் கொள்கைகளை மக்கள் மத்தியில் வெறியோடு பரப்ப தீர்மானித்துள்ளது. தஞ்சை கத்தோலிக்க பள்ளியொன்றில் லாவண்யா என்ற மாணவி சகாயமேரி என்ற வார்டனின்  துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அதை மதம் மாற்றம் என்று பரப்பி பெரும் கலவரங்த்திற்கு திட்டமிடும் நிலையில், கோவை மாவட்டத்தில் கத்தோலிக்க தேவாலாயம் ஒன்றும் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் ராமதநாதபுரம் என்னும் பகுதியில் டிரினிட்டி தேவாலயம் உள்ளது. இது பல பொது நலச்சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த  தேவாலயத்திற்குள் புகுந்த இந்துத்துவ சக்திகள் தேவாலய பீடம், சிலைகளை உடைத்து சேதப்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

Exit mobile version