திருவள்ளூர் அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான பவுல் என்பவர் மகள் அனிதா (19). இவர் ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் ஆலையில் வேலை செய்து வந்தார்.
கடந்த 13-ம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
அனிதா டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என பிஞ்சிவாக்கம் ஊராட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்களை அழிக்கும் ஆபத்தற்ற பறவை பூச்சி இனங்கள் கியூபா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு கொசுக்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
அதிக செலவுகள் அற்ற இலகுவான இந்த முறைக்கு தடையாக அமைவது கொசு அழிப்பு சுருள்களையும் மருந்த்துகளையும் உற்பத்திசெய்யும் பெரு நிறுவனங்கள். இவர்களுக்கு ஆதரவான அரச அதிகாரங்கள் கொசுக்களை அழிப்பது குறித்த வழிமுறைகளை முன்வைப்பதில்லை.
இலங்கையில் கடந்தவருடம் கியூபாவில் இருந்து இறக்குமதியான டெங்குக் கொசுக்களை அழிக்கும் தீங்கற்ற கொசு வகைகளால் நோய் பரவும் தன்மை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்தவருட முற்பகுதியில் காரணம் எதுவும் இன்றி இந்த இறக்குமதி நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் டெங்கு நோய் அதிவேகமாகப் பரவ ஆரம்பித்தது.