தலித் மக்களின் வாக்குகள் அதிக அளவு அதிமுக கூட்டணிக்கு சென்ற நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தலித் மக்களுக்கான தனித் தொகுதிகளில் அதிக இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் 46 தனித் தொகுதிகள் உள்ளன. திமுக கூட்டணி கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வெறும் 14 இடங்களில் மட்டுமே வென்றது. அதிமுக 32 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் அந்த தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறவில்லை. அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் இடதுசாரிகள், மதிமுக போன்ற கட்சிகள் மக்கள் நலக்கூட்டணி என்று தனிக் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்கள்.
ஆனால் இந்த கட்சிகள் இம்முறை திமுக கூட்டணியில் இணைந்த நிலையில் இம்முறை 29 தனித் தொகுதிகளை திமுக வென்றுள்ளது. இதில் திமுக மட்டும் 22 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு தனித் தொகுத்களிலும், காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலுமாக 29 தொகுதிகளை கைப்பற்றியுள்ளன.ஆனால் அதிமுக 17 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. வன்னியர்கள் அதிகம் வாழும் வடக்கு மாவட்டங்களிலும், தேவேந்திரகுலவேளாளர்கள் அதிகம் வாழும் தென் மாவட்டங்களிலும் அதிக அளவு தொகுதிகளும், மேற்கு மண்டலத்தில் இரண்டு தனித் தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.கடந்த இரண்டு தேர்தல்களிலும் தலித் மக்களின் வாக்குகளை அதிக அளவு வாங்கிய அதிமுக இம்முறை அதை அப்படியே திமுகவிடம் இழந்துள்ளது.