இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைத் தொற்றின் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரிக்கிறது. அதே போன்று கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தொற்று அதிகரிக்கிறது. வருகிற ஜூன் மாதத்தில் கொரோனா உச்சநிலையை அடையும் என்று அரசு வட்டாரம் தெரிவித்திருக்கும் நிலையில் சென்னையில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வந்தாலும், தமிழகத்தில் உள்ள பிற நகரங்களில் தொற்றின் தாக்கல் அதிகரிக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக மக்களுக்கு சற்று ஆறுதல் வரும் வகையில் நாடு முழுவதிலுமான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 299-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 57 ஆயிரத்து 630-பேர் குணம் அடைந்துள்ளனர். மேலும் 4,194- பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 35,873 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று 36,184 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 35,873 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஏற்கனவே 5,913 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 5,559 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 5,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவால் மேலும் 448 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,046 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் மேலும் 86 பேர் உயிரிழந்தனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 100 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 125 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 279 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 169 பேரும் உயிரிழந்தனர்.