பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஈரோட்டில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் ஒரு பெண்மணி. காங்கிரசை சேர்ந்த அந்த பெண்மணி தான் முட்டுக்கட்டையாக உள்ளார். இந்தியா மற்றும் தமிழகத்தின் பெரும் இழப்புக்கு அவரே காரணம். வளர்ச்சி திட்டங்கள் அனைத்து சுற்று சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் தடுத்து நிறுத்தப்படுகிறது என்று முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனை நரேந்திர் மோடி தாக்கி பேசினார்.
குஜராத்தில் பல்தேசிய வியாபார நிறுவனங்களில் கொள்ளைக்கு வழிதிறந்துவிட்டு இரத்தம் வழியும் வறுமை மாநிலமாக மாற்றிய இனக்கொலையாளி மோடி தொடர்பாக தமிழகத்தில் மக்கள் விழிப்பாக உள்ளனர்.
ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடும் போது மோடியின் ஸ்டண் தமிழகத்தில் எடுபடவில்லை.
ஈரோட்டில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தமிழகத்தில் ஏற்படும் மின் தடைக்கு ஒரு பெண்மணி தான் முட்டுக்கட்டையாக உள்ளார் என்று கூறினார்.