ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட காலத்தில் ஏர்செல்- மேக்ஸிஸ் நிறுவனத்தின் பங்குகள் கைமாற்றப்பட்டன. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நேரத்தில் பண பரிமாற்றம் செய்யப்பட்டதில் நிதி துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் தனது மகன் ஆதாயம் அடைவதற்காக அனுமதி வழங்க கால அவகாசம் எடுத்துக் கொண்டதாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் கூச்சல் எழுப்பினர்.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதிலளித்து பேசியதாவது :
இந்த விவகாரத்தில் எனக்கோ என் குடும்பத்தினருக்கோ எந்த தொடர்பும் இல்லை. அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தாமதமோ சட்டமீறலோ நடக்கவில்லை என கூறினார். ஆனால் எதிர்கட்சியினர் அவரை பேச அனுமதிக்கவில்லை. அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளவும் இல்லை.