Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தனது வாக்கு வங்கியை உயர்த்திக் கொண்ட நாம் தமிழர் கட்சி!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் சேர்த்து 7% சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. பெரிய கட்சிகள் எதுவும் தனித்துப் போட்டியிடாத நிலையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சுமார் 30 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சி 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தது. அதில் 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 7 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது கடந்த சட்டப் பேரவைத் தேர்தலை அதிகம்.


ஒவ்வொரு தொகுதியிலும் மூன்றாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை வாக்குகளைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி முதல் தலைமுறை வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது எனலாம். சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 48 ஆயிரம். திருவொற்றியூரில் பதிவான வாக்குகளில் 24.3 சதவிகித வாக்குகளை சீமான் பெற்றுள்ளார்.
3 தேர்தலகளை எதிர்கொண்டுள்ள நாம் தமிழர் கட்சி படிப்படியாக வளர்ந்து வருவதை இந்த தேர்தல் டேட்டாக்கள் நமக்கு உணர்த்தும்.

ஆனால் இதை அடுத்தடுத்த தேர்தல்களில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றாலும் இதே நிலையில் கூடுதலாக சில சதவிகிதங்கள் கூடுமே தவிற ஒரு தொகுதியில் கூட வெல்லும் நிலை ஏற்படாது. காரணம் திமுக, அதிமுக என்ற இரு பெறும் கட்சிகளும் சராசரியாக 30 முதல் 37 சதவிகிதம் வரையிலான வாக்கு வங்கியை கடந்த 30 ஆண்டுகளாக வைத்துள்ளன. தேமுதிக வந்த போதும், கமல் வந்த போதும் சீமான் வந்த போதும் இந்த வாக்கு வங்கியில் சேதங்களை உருவாக்க முடியவில்லை.எஞ்சியிருக்கும் 30 சதவிகித வாக்குகளில் அதிக பட்சம் 15% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற முடியும். ஏதாவது ஒரு பெரிய கட்சியோடு மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு இன்னொரு கட்சியின் வெற்றியை நான் பறித்து விடுவேன் என்றுதான் நாம் தமிழர் பயணிக்க முடியும்.


இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி பொது எதிரியாக திமுகவை அறிவித்தது. நேரடியாகவே அதிமுகவை ஆதரித்தது. திமுக,திராவிட இயக்க எதிர்ப்பு என்ற அடிப்படை கோட்பாட்டோடு பயணிக்கும் சீமான் தனக்கு கிடைக்க இருக்கும் அதிக பட்சமான 10 முதல் 15 சதவிகித வாக்கு வங்கியை வைத்து அதற்குரிய விலையை பேரங்கள் மூலம் பெற்றுக் கொண்டு தமிழக அரசியலில் இருக்கலாம். ஆனால் திராவிட இயக்கம் தேசிய இயக்கங்களை வீழ்த்திய அரியணை ஏறியது போல ஒரு போதும் ஒரு பரந்து பட்ட மக்கள் இயக்கமாக மாற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

Exit mobile version