
இலங்கை அரசியலில் மேற்கு ஏகாதிபத்தியங்களாலும் இந்திய அரசாலும் பயன்படுத்தப்பட்ட மகிந்த ராஜபக்ச தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் இறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இலங்கையில் கிறீஸ்தவப் பரம்பரையில் பிறந்து அரசியலுக்காக பௌத்தர்களாக மாறிய ராஜபக்ச குடும்பம் கடந்த பத்து வருடங்களாக இலங்கையின் ஒவ்வொரு மூலையையும் சூறையாடியது. ஏகாதிபத்தியங்களின் இனப்படுகொலை அடியாளாகப் பயன்பட்ட ராஜபக்ச இன்று அதே ஏகாதிபத்தியங்களின் வலையில் சிக்குண்டு அழிக்கப்படும் நிலையிலுள்ளார். தன்னை அழிவிலிருந்து தற்காலிகமாகத் தற்காத்துக்கொள்ள ராஜபக்ச நேரடியாகப் பங்காற்றிய கொலையான லொக்கு அதுலவினது. எதிர்வரும் காலங்களில் இலங்கையில் மேலும் இரத்தக்களரிகள் ஏற்படலாம்.
ராஜபக்சவிற்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள பேரினவாதியான மத்திரிபால சிரிசேன மேற்கு ஏகாதிபத்தியங்களின் புதிய அடியாள். தேசிய இன ஒடுக்குமுறையை ஆழப்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்துவதே மைத்திரிபாலவின் நோக்கமுமாகும்.
ராஜபக்ச நடத்திய இனப்படுகொலைக்குப் பக்கபலமாகச் செயற்பட்ட மைத்திரிபால பேரினவாத அரசியலைத் தொடர்ந்து முன்னெடுக்க ஏகபோக அரசுகளின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் இலங்கையில் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மத்தியிலும், வர்க்கப் போராட்டம் சிங்கள மக்கள் மத்தியிலும் தோன்றுவது மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய முன்நிபந்தனையாகியுள்ளது. இரண்டுமே ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரால் தலைமைதாங்கப்படுவது மட்டுமே எதிர்கால சமாதனத்தை உறுதிப்படுத்தும்.
