இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைத் தொற்றின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 3-ஆம் அலையின் தாக்கம் தென்படத் துவங்குகிறது. ஆனால் மூன்றாம் அலையில் இருந்து மக்களைக் காக்க தடுப்பூசி வேகம் பெற வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், மத்திய அரசோ தடுப்பூசியில் தெளிவான ஒரு கொள்கையை இதுவரை உருவாகவில்லை. தடுப்பூசியை அதிக விலைக்கு விற்ற மத்திய அரசு திடீரென தடுப்பூசி இலவசம் என அறிவித்தது.
ஆனாலும் போதுமான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு வழங்கவில்லை, இதனால் மக்கள் ஏமாந்து செல்கிறார்கள்.முதல் தடுப்பூசி போட்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசி போடுவதற்குக் கூட தடுப்பூசி இல்லை. ஜூலை மாதத்திற்குள் தடுப்பூசி பற்றாக்குறை சரி செய்யப்படும் என மோடி அரசு சொன்ன போதும் நிலமை அப்படி இல்லை.
கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது.. இந்தியாவில் தற்போது 34 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையும் உண்மைதானா எனத் தெரியவில்லை.காரணம் வட மாநிலங்களில் தடுப்பூசி போடாதவர்களுக்கும் போட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி கொள்கையை விமர்சித்துள்ள ராகுல்காந்தி “
‘‘ஜூலை வந்து விட்டது, தடுப்பூசி வரவில்லை. எங்கே தடுப்பூசி’’ என்று கேட்டு இருந்தார்.
இந்த நிலையில் ராகுல்காந்தி இன்று ஒரு ஒட்டுமொத்த தடுப்பூசி டிராக்கர் என்னும் வரைபடத்தை வெளியிட்டு உள்ளார். அதில் கொரோனா 3வது அலையை தவிர்க்க கொரோனா தடுப்பூசி ஓவ்வொரு நாளும் 69 லட்சம் போடவேண்டும் எனவும் ஆனால் தற்போது 50.8 லட்சம் தடுப்பூசிகளே போடப்பட்டு வருகிறது. இதற்கான இடைவெளி 27 சதவீதம் உள்ளது. இதனை சுட்டிக்காட்டி இடைவெளியை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என டுவிட் செய்து உள்ளார்.