Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தஞ்சை மாணவி தற்கொலை மத மாற்றம் காரணமா?

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள மைக்கேல் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ கத்தோலிக்க பெண் துறவியர் நடத்தும்  தூய திரு இருதய  மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்து வந்த லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்குப் பின்னால் மதமாற்றம் இருப்பதாக பாஜக, விஷ்வ இந்து பரிசத், உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பெரும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், உண்மையில் லாவண்யா தற்கொலை பற்றி விசாரிக்கத் துவங்கினால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி செய்திகள் வெளியாகிறது.

1859-ஆம் ஆண்டு துவக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளி 1998-ல் தரம் உயர்த்தப்பட்ட மேல் நிலைப்பள்ளியாக வளர்கிறது. 163 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இந்த பள்ளியின் தரமான கல்விக்காக இந்தப் பள்ளியை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த பள்ளியில் சேர்வதை விரும்புகிறார்கள். பெரும்பாலும் ஏழை மக்களின் கல்வியை தனது கொள்கையாகக் கொண்டுள்ள இந்தப் பள்ளியில் இப்போது

பள்ளியில் மொத்தம் 786 மாணவிகள் படிக்கிறார்கள் இதில் 504 இந்து மாணவ மாணவிகள், 264 கிறிஸ்தவ மாணவ மாணவிகள், 18 முஸ்லீம் மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்.

போர்டிங்கில்  தங்கிப்படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை 51 அதில் 42 இந்து மாணவிகள் 9 கிறிஸ்தவ மாணவிகள்.163 ஆண்டுகளாக  கடநத் 163 ஆணடுகளாக செயல்படும் இப்பள்ளி   மைக்கேல்பட்டியைச் சுற்றியிருக்கும்  கண்டமங்கலம,; ஒன்பத்துவேலி, திருக்காடடு ப்பள்ளி, செய்யாமங்கலம், மாரனேரி,மேகளத்தூர்,கச்சமங்கலம், செம்பியன் கிளறி, மகாதேவபுரம், பாதிரக்குடி, கோவிலடி, பகுதி மக்களுக்கு மத வேறுபாடியின்றி கல்வி கொடுத்து வருகிறார்கள். ஏழைகளுக்கு கல்வி கொடுப்பது மட்டுமே திரு இருதய  மேல் நிலைப்பள்ளியில் நோக்கம் கல்வியும் தரமாக இருப்பதால் இங்கு படிக்க இப்பகுதி ஏழைகள் போட்டி போடுவார்கள்.

இதுதான் பள்ளியின் தோராயமான மதிப்பீடு இந்த 163 ஆண்டுகால வரலாற்றில் எப்போதும் இப்பள்ளி மீது மத மாற்றச் சர்ச்சையோ அல்லது பெண் குழந்தைகளை துன்புறுத்துகிறார்கள் என்ற சர்ச்சையோ வந்ததில்லை. இதற்கு அந்த மக்களே சாட்சி இங்கு பணியாற்ரும் சிஸ்டர்களுக்கு இக்கிராமங்களில் தனி மரியாதை உண்டு,

8-ஆம் வகுப்பில் இருந்து திருமானூர் அருகில் உள்ள வடுகப்பாளையம் முருகானந்தம் என்பவர் லாவண்யா என்ற சிறுமியை எட்டாம் வகுப்பில் சேர்த்து விடுகிறார்.முருகானந்தம் மனைவி கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொள்கிறார். முருகானந்தம் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். முதல் மனைவி கனிமொழிக்கு பிறந்தவர்தான் லாவண்யா. இரண்டாம் மனைவிக்கு இரு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

8-ஆம் வகுப்பு முதல் இன்று வரை விடுமுறையின் போது வீட்டிற்குச் செல்ல மறுத்து விடுவார் லாவண்யா. எல்லா விடுமுறைகளின் போதும் போர்டிங்கில்தான் தங்கியிருப்பார். சித்தியின் கொடுமை தாங்க முடியவில்லை என தன் சக தோழிகள், விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்களிடமும் லாவண்யா கூறியுள்ளார்.

லாவண்யாவின் சித்தியின் கொடுமை காரணமாக மாணவி விடுதியை விட்டு வீட்டிற்குச் செல்ல எப்போதுமே விரும்ப மாட்டார் என்பது தெரிகிறது. 10-ஆம் வகுப்பில் 486 மதிப்பெண் பெற்று முதல் தர மாணவியாக தேர்ச்சி பெற்ற லாவண்யா படிப்பில் படு சுட்டியாக இருந்த போதும் அவருக்கு சித்தியின் தரப்பில் இருந்து கொடுமைகள் இருந்துள்ளது.

தந்தை அதனால்தான் மகள் லாவண்யா வீட்டிற்கே வந்து விடக்கூடாது என்றுதான் போர்டிங் இருக்கும் தொலைதூர பள்ளியை தெரிவு செய்து அங்கே சேர்த்து விட்டிருக்கிறார்.என்று பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

Exit mobile version