Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தஞ்சையில் சீமானின் நாம் தமிழர் கட்சி கலைக்கப்பட்டது

Seemanசீமான் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதை எதிர்த்து தஞ்சையில் நாம் தமிழர் கட்சி கலைக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கு நாம் தமிழர் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்த அவசரக் கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பாப்பாநாடு காமராஜர் தலைமையில் நடந்தது.
இதுதொடர்பாக பட்டுக்கோட்டை அரசு பிளாசாவில் நாம் தமிழர் கட்சியின் அவசரக்கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பாப்பாநாடு காமராஜ் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் பழ சக்திவேல் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் தேவராஜ், மாவட்ட துணைத்தலைவர் ஜெகநாதன் மற்றும் மதுக்கூர் பழ.மணிகண்டன், பிரபாகரன், பேராவூரணி கொன்றை சண்முகம், சேதுபாவாசத்தரம் நீலகண்டன், குமார், பட்டுக்கோட்டை சண்முகம், அருள், அணைக்காடு கிளைமெண்ட், மாணவர் பாசறை மருத. உதயக்குமார் மற்றும் ஒன்றிய, நகர பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈழத் தமிழர்கள் அவலங்களை மூலதனமாக்கி அரசியல் பிழைப்பு நடத்திய அரசியல் வாதிகளுள், சீமான் மற்றும் வைகோ ஆக்கியோர் பிரதானமானவர்கள். மக்களை அதீதமாக உணர்ச்சிவயப்படுத்தி அதனை வாக்குகளாக்கும் அரசியல் வாதிகளில் சீமான் ஈழ எதிர்ப்பாளர் ஜெயலலிதாவிற்கும், வைகோ இனக்கொலையாளி மோடிக்கும் அடியாட்களானார்கள்.
கூட்டத்தில் திராவிட கட்சிகளை அழித்துவிட்டு 2016ம் ஆண்டு தமிழனை ஆட்சியில் அமர வைப்போம் என கூறிவிட்டு தற்போது திராவிட கட்சிக்கு வாக்குகள் கேட்பது கேலிக்குறியதாவும், மற்றவர் நகைத்து பேசும் வகையிலும் இருக்கிறது.
ஓரே தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாற்பது நிலைபாடுகள் என்பது தமிழக மக்களையும், இவரை மதித்து இவர் பின்னால் வந்த இளைஞர்களையும் ஏமாற்றுவது போல் உள்ளது எனவே இந்த நிலைபாடுகளில் எங்களுக்கு இணக்கம் இல்லாததால் தஞ்சை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் விலகி கொள்கின்றோம், மாவட்ட கட்சியும் கலைக்கப்படுகிறது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டதாக அதன் மாவட்ட செயலாளர்’’ பழ.சக்திவேல் என்றூகூறினார்.

Exit mobile version