Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டேவிட் கமரனோடு இலங்கை சென்ற பெருநிறுவனங்களின் பட்டியல்

ரோரிக் கட்சிக்கு ஒரு மில்லியன் பணம் வழங்கியுள்ள நிறுவனத்தின் பிரதான உரிமையாளர் அந்தோனி பாம்போர்டுடன் கமரன்
ரோரிக் கட்சிக்கு ஒரு மில்லியன் பணம் வழங்கியுள்ள JCB நிறுவனத்தின் பிரதான உரிமையாளர் அந்தோனி பாம்போர்டுடன் கமரன்

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு அங்கு தொடர்ச்சியாக முதலிடும் நோக்கோடு 26 பிரித்தானிய பெருநிறுவனங்கள் பண உதவி வழங்கின. வங்கிகள், நிதித் துறை, கல்வித்துறை, கட்டுமானத் துறை, கனிம நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போன்றன மாநாட்டின் செலவிற்கு உதவிகளை வழங்கின.
பல நிறுவனங்கள் டேவிட் கமரனோடு இலங்கை சென்று பேச்சாளர்களாக தமது முதலீடுகள் குறித்து பொதுநலவாய வர்த்தக மன்றத்தில் பரப்புரை செய்தன.
ஒரு கொள்ளைக் கும்பலையே அழைத்துச்சென்ற டேவிட் கமரன் சுயாதீன விசாரணை நடத்தப்போவதாகவும் சமாதானத்தை ஏற்படுத்தப்போவதாகவும் கூறுவது வேடிக்கையானது. இதனை நம்பக்கோரும் புலம் பெயர் கோமாளிகள் அன்னிய மூலதனத்திற்கு எதிரான தேசியத்தின் காவலர்களாகப் பிரகடனம் செய்வது அதைவிட வேடிக்கையானது.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரனோடு இலங்கை சென்ற பெருநிறுவனங்களின் பட்டியல்:

நிறுவனம்

 

துறை

Standard

Chartered

வங்கி

Lyca
Mobile

தொலைத்
தொடர்பு

JCB

கட்டுமானம்

Ernst and Young

கணக்காளார்கள்

HSBC

வங்கி

RBS

வங்கி

Anglo-American

கனிமம்

Mabey Bridge

கட்டுமானம்

Cleveland
Bridge

கட்டுமானம்

CDC
Group

கட்டுமானம்

De La Rue

நிதி

London Stock

Exchange

நிதி

GasFin

Development

எரிபொருள்

Foresight Limited

எரிபொருள்

BT (India)

தொலைத்
தொடர்பு

ARUP

உள்கட்டமைப்பு

Roughton

International

உள்கட்டமைப்பு

Pitman Training

கல்வி

Herbert Smith

Freehills

பெருநிறுவன
சட்டத்துறை

Impact Investment

Partners

முதலீடு

Abraaj
Group

முதலீடு

Institute for

Manufacturing at

Cambridge University

உற்பத்தி

SEMTA

பொறியியல்
பயிற்சி

Forensic Pathways

ஆய்வுத்துறை

UCFB Wembley

கல்வி

NewMarket

Partners Limited

முதலீடு

 

இலங்கையில் ராஜபக்ச வழங்கும் முதலீட்டிற்கான வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களில் ஆறு நிறுவனங்கள் டேவிட் கமரனின் கட்சிக்கு நிதிவழங்குபவர்கள். பொதுவாக அனைத்து கோப்ரட்டுகளுமே தன்னார்வ நிறுவனங்களுக்குப் பணம் வழங்குபவர்கள்.

ஆங்கிலோ அமரிக்கன் நிறுவனம் தென்னாபிரிக்காவில் மரிக்கானா தங்கச் சுரங்கத்தில் அடிமைகள் போன்று நடத்தப்படும் தொழிலாளர்களை இனக்கொலை செய்து ஒன்றரை வருடங்களுக்குள்ளாக இலங்கையில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.

டேவிட் கமரன் தனது பாராளுமன்ற உரையில் கூறியது போல ‘இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது, இனிமேல் புலிகள் போன்ற கோரமானதும் அவமானகரமானதுமான பயங்கரவாத அமைப்பு உருவாகக்கூடாது. அங்கு நல்லிணக்கமும் அபிவிருத்தியுமே தேவை, நான் ‘கொமன்வெல்த் மாநாட்டில் பல வியாபார ஒபந்தங்களை மேற்கொண்டுள்ளேன்.’ இலங்கையைக் கொள்ளையடிக்கவும் வடக்கிலும் கிழக்கிலும் நல்லிணக்கத்தின் பெயரால் நிலப்பறிப்புச் செய்யவும், சிங்கள அப்பாவி மக்களைச் சூறையாடவும் அங்கு உரிமைப் போராட்டம் நடக்கக்கூடாது. இனிமேல் டேவிட் கமரன் அழைத்துச் சென்ற நிறுவனங்களின் காட்டுத் தர்பாரில் போர்க்குற்றமும் இனப்படுகொலையும் சட்டரீதியானதாகிவிடும்.

படுகொலைகளின் இரத்த வாடையோடு இலங்கையில் ஜனநாயகம் மீட்கவரும் தென்னாபிரிக்க அரசு
தென் ஆப்பிரிக்கா: தீப்பிடிக்கும் வேலை நிறுத்தப் போராட்டம்!
Exit mobile version