Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டெல்லி விவசாயிகள் போராட்டம் திட்டமிட்டப்பட்ட வன்முறை!

மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக  தொடர் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் நேற்று டிராக்டர் பேரணியை அறிவித்திருந்தனர்.

அந்த பேரணி வன்முறையில் முடிந்தது. டெல்லிக்குள் நுழைய பல வழிகள் இருந்தாகும் சிங்கு பகுதி வழியாகவே அதிக விவசாயிகள் நுழைவார்கள்.  போராட்டத்திற்கு முந்தைய நாள் இரவு வரை மத்திய உள்துறை அமைச்சகத்தின் காவல்துறை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் 30-க்கும் மேற்பட்ட விதிமுறைகளோடு ஊரலத்திற்கு அனுமதி கொடுத்தது.

நேற்று காலை குடியரசு தின விழா அணிவகுப்பு மரியாதை டெல்லியில் நடந்து கொண்டிருந்த போதே சிலர் டிராக்டர்களை டெல்லிக்குள் விட்டனர். போலீஸ் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தத் துவங்கினார்கள். இந்த சம்பவங்களில்  ஒரு ஒழுங்கீனம் நடந்துள்ளது போராட்டத்தை நடத்தும் பாரதிய கிஷான் யூனியன் சுட்டிக் காட்டுகிறது. சாலையெங்கும் டிராக்டர்கள் அல்லாத பெரிய பெரிய கனரக வாகனங்களை ஓட்டியது, செங்கோட்டைக்குள் புகுந்து சீக்கிய ஆன்மீக கொடியை நட்டியது. இவை அனைத்துமே  போராட்டத்திற்குள் புகுந்த சிலரால் திட்டமிட்டு செய்யப்பட்டவை.

சிலர் டிராக்டர்களை எடுத்து போலீஸ் கூட்டத்திற்குள் விட்டார்கள். ஆனால், போலீஸ் அவர்களை தாக்கவில்லை.அதை விடியோ எடுத்து விவசாயிகள் வன்முறை செய்வதாக ஊடகங்கள் சொன்னது. ஆனால் போலீஸால் சுடப்பட்டு ஒரு விவசாயி இறந்திருக்கிறார்.  அவர் விபத்தி இறந்ததாக போலீஸ் சொல்கிறது.ஆனால் அவர் உடலில் குண்டு காயங்கள் இருக்கின்றன.

நேற்றைய போலீஸ் தாக்குதலில் பல நூறு விவசாயிகள் காயமடைந்திருக்கிறார்கள். சில கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்  டெல்லி முழுக்க 144 போடப்பட்டுள்ளது. இணையம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு ஊடகங்களும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்திகளை முடித்துக் கொண்டுள்ளன.

ஆனால்  போராட்டத்தை நடத்தும் பிரதான சங்களுள் ஒன்றான பாரதிய கிஷான் சங்கம் மூன்று வேளாண் சட்டங்களை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும். நாங்கள் ஏற்கனவே போராடிய இடத்தில் போராட்டத்தை தொடர்கிறோம் என்றும் அறிவித்துள்ளது.

Exit mobile version